முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பை அரசு குறைக்காது: மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு விளக்கம்

வியாழக்கிழமை, 20 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பை அரசு குறைக்காது என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு விளக்கம் அளித்துள்ளார்.

விளக்குகள் நீக்கம்
நமது நாட்டில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, பாராளுமன்ற சபாநாயகர், கவர்னர்கள், முதல்வர்கள், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டவர்களின் கார்களில் சிவப்பு நிற சுழல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ஐகோர்ட்டு பதிவாளர், போலீஸ் டி.ஜி.பி., அரசு துறை செயலாளர்கள், மாவட்ட நீதிபதி, போலீஸ் கமி‌ஷனர், டி.ஐ.ஜி., உள்ளிட்டவர்களின் கார்களில் நீல நிற சுழல் விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன.மிக முக்கிய பிரமுகர்கள் என இவர்களை அடையாளம் காட்டி வந்த இந்த சிவப்பு மற்றும் நீல நிற சுழல் விளக்கு கலாசாரம் முடிவுக்கு வருகிறது.

அமைச்சர் அறிவிப்பு
இது தொடர்பான முடிவு, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று முன்தினம் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது.  இந்த கூட்டத்தில், அவசர கால வாகனங்களை (ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை) தவிர்த்து பிற அனைத்து வாகனங்களிலும் சுழல் விளக்குகள், சைரன்கள் அகற்றப்படும்.  இந்த திட்டம் மே 1–ந்தேதி அமலுக்கு வருகிறது.விதியை மீறி யாரேனும் செயல்பட்டால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக சம்மந்தப்பட்ட விதிமுறைகளுடன் முறையான அறிவிப்பு வெளியிடப்படும் போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.

பாதுகாப்பு குறைப்பு ...
இந்த நிலையில், இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியதாவது:-  முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பை குறைக்கும் திட்டம் அரசிடம் இல்லை. பாதுகாப்பை பொறுத்தவரை நாட்டில் நலனுக்காக மிகவும் அவசியமான ஒன்றாகும். ஏனெனில் முக்கிய நபர்கள் காக்கப்படவேண்டும். இதைதவிர வேறு எதுவும் முன்னுரிமை அளிக்கப்படாது. நாட்டில் அனைவருமே முக்கிய பிரமுகர்தான். இந்த அரசாங்கத்தின் தத்துவமே இதுதான்”  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்