இந்திய அணியில் மீண்டும் நிச்சயம் இடம்பிடிப்பேன்: யூசுப்பதான் நம்பிக்கை

வியாழக்கிழமை, 20 ஏப்ரல் 2017      விளையாட்டு
Yusuf Pathan 2017 4 20

கொல்கத்தா : தொடர்ந்து சிறப்பாக விளையாடி நிச்சயம் ஒரு நாள் இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆல்-ரவுண்டர் 34 வயதான யூசுப்பதான் பேட்டியளித்துள்ளார்.

இடம் பிடிப்பேன்

இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் இடம்பிடிக்க போராடி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆல்-ரவுண்டர் 34 வயதான யூசுப்பதான் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெறுவதில் எனக்கு முன்பாக யார் இருக்கிறார்கள் என்பது ஒரு பிரச்சினையே இல்லை.  எனக்கென்று சிறப்பு திறமை இருப்பதாக கருதுகிறேன். அதனால் என்னுடன் வேறு யாரும் போட்டியிட (வாய்ப்பை பெறுவதில்) முடியாது. தொடர்ந்து சிறப்பாக விளையாடினால், நிச்சயம் ஒரு நாள் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும்’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: