மறைந்த முதல்வர் ஜெயலலிதா காரில் சுழல் விளக்கை பயன்படுத்தியதே இல்லை: முதல்வர் எடப்பாடி பேட்டி

வியாழக்கிழமை, 20 ஏப்ரல் 2017      தமிழகம்
Palanisamy siren lamp 20 04 2017

சென்னை  - மத்திய அரசின் உத்தரவை அடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த சிவப்பு சுழல் விளக்கை தாமாகவே அகற்றினார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதே, தமது காரில் சுழல் விளக்கை பயன்படுத்தியதில்லை என அப்போது அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.  முக்கிய பிரமுகர்கள், கார்களில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்துவது தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. அதன்படி, மிகவும் அவசர தேவைக்குப் பயன்படுத்தப்படும் ஆம்புலன்ஸ், போலீஸ் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்களில் மட்டுமே இத்தகைய சிவப்பு சுழல் விளக்குகள் பயன்படுத்தப்படலாம் என மத்திய அமைச்சரவை நேற்று முடிவு செய்தது.

மேலும், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், மக்களவை சபாநாயகர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரின் கார்களில் மட்டுமே சிவப்பு விளக்கு பொருத்திக்கொள்ள அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, பல்வேறு மாநில முதல்வர்களும் , அமைச்சர்களும் தங்கள் வாகனங்களில் உள்ள சிவப்பு சுழல் விளக்குகளை அகற்றியுள்ளனர்.

தமிழக முதல்வர் . எடப்பாடி கே.பழனிசாமி, தனது வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த சுழல் விளக்கை தலைமை செயலகத்தில் நேற்று தாமாகவே அகற்றினார். அப்போது பேசிய அவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழக முதலமைச்சராக இருந்த காலத்திலேயே தமது காரில் சுழல் விளக்கை பயன்படுத்தியதில்லை என குறிப்பிட்டார். தமிழகத்தில் நிலவும் குடிநீர்ப் பிரச்னைக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் உள்ளாட்சித்துறைக்கு ஏற்கனவே 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். ஜெயலலிதா ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும், தங்கள் வாகனங்களில் உள்ள சுழல் விளக்குகளை அகற்றுவார்கள் என முதலமைச்சர்.எடப்பாடி பழனிசாமி மேலும் தெரிவித்தார்.


இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: