முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

87 பேர் பலியான சிரியா ரசாயணத் தாக்குதலில் சரீன் வாயு பயன்படுத்தப்பட்டதாக தகவல்

வியாழக்கிழமை, 20 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

தி ஹாகூ  - சிரிய ரசாயண தாக்குதலில் பெறப்பட்ட மாதிரிகளை சோதனை செய்ததில் சரீன் வாயு பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

ரசாயணத் தாக்குதல்
சிரியாவில் கடந்த ஏப்ரல் 4-ல் நடத்தப்பட்ட ரசாயண தாக்குதலில் சரீன் வாயு பயன்படுத்தப்பட்டுள்ளதாக வேதியியல் சோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. சிரியாவில் அரசுக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகளை குறிவைத்து அரசுக்கு ஆதரவான விமானப்படையின் போர் விமானங்கள் கடந்த ஏப்ரல் 4-ம் தேதி ரசாயன ஆயுதங்களை வீசி தாக்குதல் நடத்தியது.

87 பேர் பலி
இட்லிப் மாகாணத்தின் மத்திய பகுதியில் உள்ள கான் ஷெய்க்குன் நகரில் போராளிகள் வாழும் பகுதியில் நடத்தப்பட்ட இந்த ரசாயண தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 87 பேர் உயிரிழந்தனர். இந்த ரசாயண தாக்குதலுக்கு ரஷ்ய மற்றும் சிரிய ராணுவம் தான் காரணம் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குளோரின் வி‌ஷ வாயுவை பீப்பாயில் அடைத்து சிரிய ராணுவம் ஹெலிகாப்டர் மூலம் வீசியதாக இந்த தாக்குதல் தொடர்பாக ஐ.நா. சபை செய்தி வெளியிட்டிருந்தது. இந்நிலையில், இந்த தாக்குதலில் சரீன் வாயு பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்க சோதனையில் தெரிய வந்துள்ளது.

மாதிரிகள் மூலம் ...
தாக்குதலில் பாதிக்கப்பட்ட 10 பேரிடம் எடுக்கப்பட்ட மாதிரிகளை இரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பின் (ஓ.பி.சி.டபிள்யூ) ஆய்வகத்தில் வைத்து சோதனை செய்ததில் சிரின் வாயு பயன்படுத்தி இருப்பதை கண்டறிந்த விஞ்ஞானிகள், சரீன் வாயுவை பயன்படுத்தியிருப்பதை மறுக்க முடியாது என்றும் கூறியுள்ளனர். மேலும் 7 பேரிடம் இருந்து பெறப்பட்டுள்ள மாதிரிகள் இருவேறு ஆய்வகங்களில் சோதனை செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் பலரிடம் இருந்து மாதிரிகள் பெறப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.  இந்த சம்பவம் குறித்து ஓட்டெடுப்பு நடத்தி மீண்டும் விவாதிக்க, அதிகாரிகள் குழு கூட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago