ஈரோடு கொல்லம்பாளயத்தில் இன்று ஜெய்சூர்யாஸ் புதிய கிளை திறப்பு விழா

வியாழக்கிழமை, 20 ஏப்ரல் 2017      ஈரோடு

- ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு ஜெய சூர்யாஸ்  சில்லரை விற்பனை நிலையம் இயங்கி வருகின்றது. ஈரோடு மாநகரிக் முக்கியபகுதிகள், சேலம்,நாமக்கல், திருச்செங்கோடு,பள்ளிபாளையம்,ராசிபுரம் பவானி, அந்தியூர் பெருந்துறை , ஆத்தூர், என 20 இடங்களில் ஜெய சூர்யாஸ்   நிறுவன கிளைகள் இயங்கிவருகின்றன. இங்கு  பொது மக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் தேர்வு செய்துசில்லரை விற்பனை விலையில் வாங்கி செல்லுகின்றனர். தற் போதுஈரோடு கொல்லம்பாளயத்தில் ஜெய்சூர்யாஸ் 21 வது புதிய கிளை திறப்பு விழா இன்று வெள்ளி கிழமைகாலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. விழாவுக்கு  அக்னிஸ்டீல்ஸ் தலைவர் ஆர்.கிருஷ்ண மூர்த்தி தலைம தாங்குகிறார். எஸ். கே.எம் அனிமல் பீட்ஸ் அன்டு புட்ஸ் இந்தியா நிறுவனத்தின் செயல் இயக்குனர் ஷியாமளாஷர்மிலிசந்திரசேகர் புதிய கிளையை திறந்துவைக்கிறார்.

குத்து விளக்கு

ஊலக சமுதாய சேவா சங்க முதுநிலை பேராசிரியர்எம். சதாசிவம்,வேதாத்திரி பதிப்பக இணைஇயக்குனர் கே.ராஜராம், இயக்குனர் கே.கே. சண்முகம் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். இரோடு லோட்டஸ் ஆஸ்பத்திரி டாக்டர் உஷா, செந்தில் மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி டாக்டர் மீனாட்சி கவுரிசங்கர், மீனு மான்ஸ்சென்டர் உர்மையாளர் மீனாட்சி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றிவைக்கிறார்கள். முதல் விற்பனையை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.ஈஸ்வர மூர்த்தி தொடங்கிவைக்கிறார்.எம். எஸ்.கே குழும நிறுவனங்களின் இயக்குனர் ஆனந்த்தங்கராஜ் பெற்றுகொள்கிறார்.சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீ  அமுதா சிட்ஸ் உரிமையாளர் எஸ்.பி. நாராயணன் கலந்து  கொள்கிறார்.


சிறப்பு தள்ளுபடி

 திறப்பு விழா ஏற்பாடுகளை ஜெயசூர்யாஸ் நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டி. நவநீதகிருஷ்ணன், இளம் இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரிஎன். சிவாஜிசித்தார்த்,செயல்இயக்குனர் என். பாரி கண்ணன் ஆகியோர் தலைமையில்மூத்த செயல் அதிகாரிகள் துரை சிங்,கே. ரவிக்குமார்,பி. லிங்கபாண்டியன், என்.ரவிக்குமார்செய்துள்ளனர்.  இந்த புதிய கிளை திறப்பு விழா குறித்து நிர்வாக இயக்குனர் டி. நவநீதகிருஷ்ணன் கூறுகையில், புதிய கிளை திறப்புவிழாவை யொட்டி இன்று 21-ந்தேதி முதல் மே மாதம் வரை ஒருமாத காலத்திற்குகொல்லம் பாளையம் ஜெய்சூர்யாசில் விற்பனை செய்யப்படும் ஓப்பனைபொருட்கள்,ஆரோக்கிய மற்றும் சக்தி பொருட்கள், நாவல்டிபொருட்கள் பிரிவுகளில் சிறப்பு தள்ளுபடி அளிக்கப்படுகிறது ஹஹ என தெரிவித்தார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

எரியும் பனிக்கட்டி

உலகில் முதன் முறையாக மீத்தேன் ஹைட்ரேட் எனும் எரிபொருளை சீன பொறியியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கடந்த வருடமே, எரியக்கூடிய பனிக்கட்டி என அழைக்கப்படும் மீத்தேன் ஹைட்ரேட் வாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீனா அறிவித்திருந்தது. எனினும் தற்போது தான் இது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த வாயுவானது பனிக்கட்டி போன்று தோற்றத்தினை கொண்டிருப்பதனாலேயே எரியும் பனிக்கட்டி என அழைக்கப்படுகின்றது. இயற்கை எரிபொருளாகக் காணப்படும் இவ்வாயு எவ்வாறு தோற்றம் பெறுகின்றது என்பது தொடர்பான விளக்கப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை இவ்வாயுவைக் கண்டறிய அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் தென்கொரிய நாடுகளும் பல மில்லியன் டாலர்களை முதலீடு செய்திருந்த நிலையில்,  சீனா இதில் வெற்றிபெற்றுள்ளது.

மனிதர்களை போன்றே....

சமூக ஈடுபாடு மனிதர்களில் அதிகம் காணப்படுகின்றது. இதே இயல்பு குரங்குகளிலும் காணப்படுவதாக தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். குரங்கின் மூளையிலுள்ள நரப்பு வலையமைப்பினை ஸ்கேன் செய்து பார்த்த போது இந்த உண்மை வெளியாகியுள்ளது.குரங்குகளின் மூளைகளில் உள்ள நியூரான்களில் மனிதர்களை போன்று கற்பனைத்திறன் உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கலாம் பெயர்

விண்வெளியில் ஐ.எஸ்.எஸ். என்று அழைக்கப்படும் சர்வதேச விண்வெளி மையத்தில் புதிய உயிரினம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய உயிரினம், பாக்டீரியா வடிவம் போன்றது. இந்த உயிரினம் பூமியில் காணப்படுவதில்லை. சர்வதேச விண்வெளி நிலையத்தில் மட்டுமே காணப்படுபவை. இந்த உயிரினத்துக்கு மறைந்த டாக்டர் அப்துல் கலாமின் பெயரை நாசா விஞ்ஞானிகள் சூட்டியுள்ளனர்.

குடிநீருக்காக ....

அண்டார்டிகாவில் இருந்து ஐக்கிய அரபு நாடுகளுக்கு குடிநீர் எடுக்கும் திட்டத்தை 2019-ம் ஆண்டிற்குள் தொடங்க, அமீரக நாடுகள் திட்டமிட்டுள்ளன. குடிநீர் பிரச்சனையை தீர்க்க அண்டார்டிகாவிலிருந்து பனிப்பாறைகளை வெட்டி எடுத்து, கடல்மார்க்கமாக 9,200 கி.மீ கொண்டு வந்து, பின்னர் அதை தண்ணீராக்கி விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்கு சுமார் 500 மில்லியன் டாலர்கள் செலவாகுமாம்.

மாற்று வழி

பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கக் கூடிய கார்கள், 2030-இல் பயன்பாட்டில் இல்லாத நிலை உருவாகும். 2030-இல் எரிசக்திப் பற்றாக்குறையாலும் சுற்றுச்சூழல் கருதியும், பெட்ரோல் புழக்கமே அரிதாகிவிடுமாம். 2024-ல் ஒரு பேரல் பெட்ரோல் வெறும் 25 அமெரிக்க டாலராகக் குறையும் என்றும், 2030-க்குள் உலகில் எண்ணெய் தொழில் முடங்கிப் போகும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

வானில் அதிசயம்

சூரிய குடும்பத்தில் உள்ள நெப்டியூன் கோளுக்கு அருகில் உள்ள குயிர்பெர் மண்டலத்தில், 1,500 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட, குள்ளமான கிரகம் ஒன்று உள்ளது. இதற்கு ‘2007 OR10’ என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இந்த குள்ள கிரகத்தில் 400 கிலோமீட்டர் பரப்பளவில் நிலா ஒன்று இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஸ்மார்ட் வாட்ச்

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றைக் கண்டறியும் சென்சார்களைக் கொண்ட ஸ்மார்ட் வாட்ச்களைக் கண்டுபிடிப்பது ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்-இன் கனவாக இருந்தது. இதற்கு வடிவம் கொடுக்கும் நவீன சென்சார்களைத்தான் ஆப்பிள் நிறுவன பயோமெடிக்கல் என்ஜினியர்கள் தற்போது உருவாக்கியுள்ளனர்.

கூகுள் லென்ஸ்

கூகுள் லென்ஸ் மூலம் நீங்கள் ஏதேனும் ஒரு பொருளை உங்கள் கைபேசியின் கேமராவில் காட்டினால் அதைப்பற்றிய முழு தகவல்களையும் உங்களுக்கு அளித்துவிடும். உதாரணமாக நீங்கள் செல்லும் வழியில் ஒரு பூவை பார்க்கிறீர்கள். அந்த பூவைப்பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் அந்த பூவை உங்கள் கேமராவில் காட்டினால் போதும், உங்களுக்கு எல்லா தகவல்களையும் கூகுள் லென்ஸ் தெரிவித்துவிடும். கடினமான வைஃபை ரகசிய எண்ணை மிக எளிதாக கூகுல் லென்ஸ் மூலம் அறிந்து கொள்வதுடன், வைஃபை-யை இணைத்தும் கொள்ளலாம்.மேற்கொண்ட வசதிகளை கொண்ட கூகுள் அசிஸ்டண்ட்கள் அனைத்து ஆண்டராய்டு மொபைல்களிலும் உள்ளது.

மனிதர்களை மிஞ்சும் ரோபோ

ரோபோகள் மருத்துவர்களால் செய்ய முடியாத பல செயல்களை நொடிப் பொழுதில் செய்து முடித்து விடுகிறது. அமெரிக்காவில் உள்ள யூட்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு ஒன்று, 2.5 நிமிடத்தில் அறுவை சிகிச்சை செய்யக்கூடிய ரோபோவினை வடிவமைத்துள்ளனர். பொதுவாக மூளை அறுவை சிகிச்சை செய்ய மனிதர்களால் குறைந்தது 2 மணி நேரமாகும். ஆனால் அதே அறுவை சிகிச்சையை வெறும் 2.5 நிமிடத்தில் செய்யக்கூடிய திறன் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் ரோபோ. மேலும் சி.டி ஸ்கேன் தொழில்நுட்பத்தில் மூளையின் பகுதிகளை பிரித்து அறியக்கூடிய திறனையும் இந்த ரோபோ பெற்றுள்ளது. மூளை அறுவை சிகிச்சையில் மட்டுமல்ல, இடுப்பு தொடர்பான ஆபரேஷன்களிலும் இந்த சாதனம் பயன்படுத்தபடுகிறது.

மறதி நோய்

வயது மூப்பின் காரணமாகவும், மன அழுத்தம் காரணமாக அல்சைமர் எனும் மறதி நோய் ஏற்படுவதாக நம்பப்பட்டு வந்த நிலையில்,  தற்போது வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி, சோயா ஒரு சில தானியங்கள், சில பால் பொருட்கள் உள்ளிட்டவற்றில் உள்ள அதிக புரதம் மறதி நோயை உண்டாக்குவதாக ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

புதிய வசதி

உலகம் முழுவதும் 200 கோடி பேர் பயன்படுத்தும் ஃபேஸ்புக்கில் உணவுகளை ஆர்டர் செய்யும் புதிய வசதி அறிமுகப்படுத்தபட்டுள்ளது. இதற்கு ஃபேஸ்புக் நிறுவனம், ‘ஃபேஸ்புக் ஆர்டரிங்க்’ என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில், வரும் அக்டோபர் மாதம் முதல் உணவு ஆர்டர் செய்யும் புதிய வசதி நடைமுறைப்படுத்தவுள்ளது.

காற்று தூய்மை

மன அழுத்தம் மட்டுமல்ல, காற்று மாசுபாடு கூட தூக்கமில்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் என்கிறது சமீபத்திய ஆய்வு முடிவு. மூக்கு, தொண்டையின் பின்புறப் பகுதிகள் மாசடைந்த காற்றால் பாதிக்கப்பட்டு தூக்கமின்மைக்கு காரணமாக மாறுவதாக வாஷிங்டன் பல்கலைக்கழகம் நடத்தியுள்ள ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.