கங்கையை சுத்தப்படுத்த டெண்டுல்கர் தலைமையில் பிரசாரக்குழு பிரதமர் மோடி திட்டம்

வியாழக்கிழமை, 20 ஏப்ரல் 2017      இந்தியா
Modi Sachin(N)

புதுடெல்லி  - கங்கை நதியை சுத்தப்படுத்தும் விழிப்புணர்வு பிரசாரத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர் தலைமையில் பிரசார குழு அமைக்க பிரதமர் மோடி ஆலோசித்து வருகிறார்.

கங்கை நதி மாசு
நாட்டின் புனித நதியாக விளங்கும் கங்கை பல ஆண்டுகளாக மாசு அடைந்து வருகிறது. குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் அனைத்து வகையான கழிவுகளும் கங்கையில் கொட்டப்படுகிறது. பலநகரங்களின் சாக்கடை கால்வாய்களும் கங்கையில் விடப்படுகிறது. இதனால் கங்கை நதி மாசுபட்டு அதன் புனித தன்மையை இழந்து வருகிறது.

தனி இலாகா
கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்தில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது கங்கை தூய்மைப்படுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது. பிரதமர் மோடி பதவி ஏற்றதும் கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவையில் தனி இலாகா ஒதுக்கி அதற்கு உமாபாரதியை அமைச்சராக நியமித்தார்.


சுத்திகரிப்பு நிலையங்கள்
கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடும் செய்துள்ளது. இந்த நிதியைக்கொண்டு கங்கையில் கழிவு நீர் கலக்கும் இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. சுத்திகரிப்பு செய்யப்பட்ட பின்பு தான் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் தண்ணீரும் கங்கையில் விட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கங்கை கரையில் உள்ள நகரங்களில் வசிக்கும் மக்கள் பிளாஸ்டிக் குப்பைகள் போன்றவற்றை கங்கையில் கொட்ட வேண்டாம் என்று விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை பிரபலங்களை கொண்டு மேலும் தீவிரப்படுத்த பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.

டெண்டுல்கர் தலைமையில் ...
இதற்காக முன்னாள் கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர் தலைமையில் பிரசார குழு அமைக்க பிரதமர் மோடி ஆலோசித்து வருகிறார். இது தொடர்பாக பிரதமர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், கிரிக்கெட் வீரர் தெண்டுல்கரை கங்கை நதி தூய்மைப்படுத்தும் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அவரது பிரசாரம் கங்கை நதி தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும், தற்போது கங்கையில் கலக்கும் மாசு குறைந்து வருகிறது. இன்னும் இதிலும் தீவிரம் காட்ட வேண்டியுள்ளது என்று தெரிவித்தனர்.

தேர்தல் வாக்குறுதி
பிரதமர் மோடியின் வாரணாசி பாராளுமன்ற தொகுதியும் உத்தரப் பிரதேசத்தில் கங்கை நதிக் கரையில் உள்ளது. வாரணாசியில் ஏராளமான கோவில்களும் இருப்பதால் புனித நகரமாக விளங்கி வருகிறது. கங்கையை சுத்தப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதி அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bigg Boss 2 Tamil | Bigg Boss Day 1 Promo 3 | 18.06.2018

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

ரம்ஜான் பிரியாணி | Ramzan Special Chicken Biryani in Tamil | Iftaar Special Biryani Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: