ஊரக வாழ்வாதார இயக்க காலிப்பணியிடம் 10 இடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

வியாழக்கிழமை, 20 ஏப்ரல் 2017      ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் செயல்படுத்தப்படும் முதல், இரண்டாம், மூன்றாம் கட்ட வட்டாரங்களில் தொகுப்பு அளவிலான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.ஈரோடு கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள அறிக்கை அந்தியூர் யூனியன் - பர்கூர் தொகுப்பு - 3, பவானிசாகர் யூனியன் - உத்தண்டியூர் தொகுப்பு - 2, சென்னிமலை யூனியன் - வெள்ளோடு தொகுப்பு - 1, தாளவாடி யூனியன் - ஆசனூர் தொகுப்பு - 2, பெருந்துறை யூனியன் - விஜயபுரி தொகுப்பு - 1, டி.என்.பாளையம் யூனியன் - கொண்டையம்பாளையம் தொகுப்பு - 1 என, பத்து காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற, 21 முதல், 45 வயதுக்கு உட்பட்டவர் விண்ணப்பிக்கலாம். பணியாளர் தேர்ந்தெடுக்கப்படும் தொகுப்பில், ஏதாவது ஒரு சுய உதவிக்குழுவில் குறைந்தது ஐந்து ஆண்டுகள் உறுப்பினராகவும், பதவியில் உள்ளவராகவும் இருக்க வேண்டும். பணி நிமித்தமாக வட்டாரம் முழுவதும் செல்ல தயாராக இருக்க வேண்டும். மொபைல் போன் வைத்திருக்க வேண்டும். பட்டப்படிப்பு, அடிப்படை கணினி அறிவு, டூவீலர் மற்றும் ஓட்டுனர் உரிமம் பெற்றவருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்தகுதி உள்ள பஞ் அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்கள், மகளிர் குழு உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட பஞ் அளவிலான கூட்டமைப்பு பரிந்துரை கடிதத்துடன், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, வரும், 21க்குள், இணை இயக்குனர்/திட்ட இயக்குனர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, பூமாலை வணிக வளாகம், பெருந்துறை ரோடு, குமலன்குட்டை, ஈரோடு - 11, என்ற விலாசத்துக்கு பதிவு அஞ்சல் அனுப்பலாம். மேலும், 0424-2257087 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்: