முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க வான் பகுதிக்குள் அத்து மீறி நுழைந்த ரஷ்ய நாட்டு போர் விமானங்கள் விரட்டியடிப்பு

வியாழக்கிழமை, 20 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - அமெரிக்க வான் பகுதிக்குள் அத்துமீறி பறந்த ரஷ்ய போர் விமானங்களை, அமெரிக்க போர் விமானங்கள் இடைமறித்து திருப்பி அனுப்பிய சம்பவம் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரோந்து சுற்றி ...
வட அமெரிக்க கண்டத்தில் கனடாவின் மேற்கு பகுதியில் அலாஸ்கா என்ற இடம் உள்ளது. இது, அமெரிக்காவுக்கு சொந்தமான பகுதி ஆகும். இதையொட்டி கோடியாக் என்ற தீவு இருக்கிறது. இதுவும் அமெரிக்காவுக்கு சொந்தமானது. இதையொட்டிதான் ரஷ்யாவின் கிழக்கு பகுதி நிலப்பரப்பு அமைந்துள்ளது. ரஷ்ய போர் விமானங்கள் அந்த பகுதியில் அடிக்கடி ரோந்து சுற்றி வருவது வழக்கம்.

பின் வாங்கின ...
இவ்வாறு ரோந்து வந்த 2 போர் விமானங்கள் கோடியாக் தீவு பகுதியில் அத்து மீறி நுழைந்து சுற்றி வந்தது. இவை டி.யு.-95 என்ற வகையை சேர்ந்த குண்டு வீச்சு விமானங்கள் ஆகும். ரஷ்ய விமானங்கள் அத்து மீறி நுழைந்தது தெரிய வந்ததும் அமெரிக்கா 2 போர் விமானங்களை அந்த திசை நோக்கி அனுப்பியது. எப்.-22 ராப்டார் வகையை சேர்ந்த இந்த விமானங்கள் ரஷ்ய போர் விமானங்களை இடைமறித்தது. இதனால் ரஷ்ய விமானங்கள் பின்வாங்கியதுடன் தங்கள் வான்பகுதிக்கு சென்று விட்டன.  இத்தகவலை அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இந்த சம்பவம் குறித்து பென்டகனோ, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகமோ எந்த கருத்தையும் வெளியிடவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்