முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சசிகலா, தினகரனிடம் ராஜினாமா கடிதம் பெற வேண்டும் : ஓபிஎஸ் அணி வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 20 ஏப்ரல் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை,  - ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் சசிகலா குடும்பத்தினர் நீக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வேண்டும் என்றும் ஓபிஎஸ் அணி கூறியுள்ளது.

முதல்வர் பதவி கேட்கவில்லை
இரு அ.தி.மு.க அணிகள் இணைப்புத் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் கே.பி.முனுசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சசிகலா, டிடிவி தினகரனிடம் ராஜினாமாக் கடிதத்தைப் பெற வேண்டும்.தினகரனை வெளியேற்றி நாடகம் நடத்துகின்றனர். சசிகலா குடும்பத்தினர் நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர். கட்சியில் இருந்து சசிகலா, தினகரன் இருவரையும் வெளியேற்றுவதை அறிக்கையாக தர வேண்டும். அமைச்சர்கள் தான்தோன்றி தனமாக பேசுகிறார்கள். தம்பிதுரை எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் என்கிறார். நாங்கள் முதல்வர் பதவி வேண்டும் என நாங்கள் கேட்டோமா கேட்கவில்லை.

வாபஸ் பெற வேண்டும்
சசிகலா, தினகரனிடம் ராஜினாமா கடிதம் பெற வேண்டும்.தேர்தல் ஆணைத்தில் சசிகலா பொது செயலாளர் தினகரன் துணைப்பொது செயலாளர் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்யபட்டது. இதனை வாபஸ் பெற வேண்டும். சசிகலா குடும்பத்தின் முதல்வராக பழனிசாமி உள்ளார். மக்கள் செல்வாக்கு இல்லாத அணியாக சசிகலா தரப்பினர் உள்ளனர். பக்குவமில்லாத அரசியல்வாதியாக ஜெயக்குமார் இருக்கிறார் அவமானப்படுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார்கள்.

மக்கள் செல்வாக்குள்ளவர்
சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டாயத்தின் பேரில் மாற்று அணியில் உள்ளனர். முதல்வர் உள்ளிட்ட பதவிகளை நாங்கள் கேட்கவில்லை.தேர்தல் நடந்தால் ஓ.பன்னீர்செல்வம்தான் முதல்வர் தேர்வு செய்யப்படுவார். சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டாயத்தின் பேரில் மாற்று அணியில் உள்ளனர். சசிகலா குடும்பத்தை சேர்ந்த 30பேரும் நீக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வேண்டும். யாரோ ஒருவர் பாதுகாப்பில் மக்கள் செல்வாக்கு தொண்டர்கள் செல்வாக்கு இருப்பதால் எங்களுடன் சேரத்துடிக்கிறார்கள். மக்கள் செல்வாக்குள்ள ஒரே தலைவர் பன்னீர்செல்வம் மட்டும் தான். எப்போது தேர்தல் நடந்தாலும் பன்னீர்செல்வத்தை முதலமைச்சராக்க மக்கள் தயாராகி விட்டார்கள். எங்கள் கோரிக்கை ஏற்கப்படாதபோது பேச்சுவார்த்தை எப்படி நடைபெறும்.எடப்பாடி அணியில் இருக்கும் எம்.எல்.ஏக்களும் முதலமைச்சராக பன்னீர்செல்வம் தான் வரவேண்டும் என விரும்புகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago