ஏ.டி.எம்களில் பணம் இல்லாததால் போலீசாருடன் மோதி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சிவசேனா எம்.பி. கெய்க்வாட்

வியாழக்கிழமை, 20 ஏப்ரல் 2017      இந்தியா
Ravindra Gaikwad(N)

மும்பை   - ஏர் - இந்தியா மேலாளரை செருப்பால் அடித்து சர்ச்சையில் சிக்கிய சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் இப்போது போலீசாருடன் மோதலில் ஈடுபட்டு உள்ளார்.

வாக்கு வாதம்
மராட்டிய மாநிலம் மரத்வாடா பகுதியில் ஏ.டி.எம்கள் செயல்படாமல் கிடக்கும் விவகாரத்தில் சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் ஆவேசமான வாதத்தில் ஈடுபட்டு உள்ளார். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோவில் ரவீந்திர கெய்க்வாட் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. ஒஸ்மானாபாத் எம்.பி.யான கெய்க்வாட் கடந்த செவ்வாய் அன்று லத்தூர் சென்று உள்ளார். அப்போது ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க தன்னுடைய உதவியாளரை அனுப்பி உள்ளார், ஆனால் ஏ.டி.எம் சென்ற உதவியாளர் பணம் இல்லாமல் திரும்பி உள்ளார்.

திட்டிய எம்.பி
பிற ஏ.டி.எம்மிற்கு சென்றபோதும் இதே நிலைதான், இச்சம்பவம் கெய்க்வாட்டை கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்றது. இதனையடுத்து அங்கு உள்ள ஏ.டி.எம்மிற்கு முன்னால் தன்னுடைய ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார், உடனடியாக அங்கு வந்த போலீசார் போராட்டத்தை கைவிடுங்கள், சாலையில் போக்குவரத்து பாதிக்கிறது என கோரிக்கை விடுத்து உள்ளனர், ஆனால் சிவசேனா எம்.பி. அவர்களை திட்டிஉள்ளார்.


அமைச்சரின் பணி
கெய்க்வாட் பேசுகையில், “ஏ.டி.எம்களில் கடந்த 15 நாட்களாக பணம் கிடையாது, நாங்கள் என்ன செய்ய முடியும்?” என கேள்வி எழுப்பி உள்ளார். அவர்கள் (பாரதீய ஜனதா தலைமையிலான அரசு) 50 நாட்கள் அவகாசம் கேட்டனர் (ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையை அடுத்து நிலைமை சீரடைய). ஆனால் நாம் அவர்களுக்கு 100 பின்னர் 200 நாட்கள் கொடுத்துவிட்டோம். இது மத்திய மற்றும் மாநில நிதி அமைச்சர்களில் பணியாகும். நிலைமையை சரிசெய்ய வேண்டியது லத்தூர் கார்டியன் அமைச்சரின் பணியாகும் என்றும் கூறிஉள்ளார் கெய்க்வாட்.

இதை ஷேர் செய்திடுங்கள்: