மத உணர்வை புண்படுத்தியதாக டோனிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்

வியாழக்கிழமை, 20 ஏப்ரல் 2017      விளையாட்டு
dhoni 2017 1 11

புதுடெல்லி - மத உணர்வை புண்படுத்தியதாக டோனிக்கு எதிராக தொடரப்பட்ட கிரிமினல் வழக்கை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. டோனியை இந்துக் கடவுள் விஷ்ணுவாக சித்தரித்து, அவரது கையில் ஷூ போன்றவற்றை வைத்தவாறு ஆங்கில இதழ் ஓன்று அட்டைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டது. இது இந்து மக்களின் மத உணர்வுகளை காயப்படுத்துவதாகக் கூறி  ஆந்திர பிரதேசம் மாநிலம் அனந்தபூரில் டோனிக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது.

தன் மீதான கிரிமினல் வழக்கை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் டோனி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், டோனிக்கு எதிரான கிரிமினல் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அதேபோல், புகைப்படத்தை வெளியிட்ட பத்திரிகையின் ஆசிரியருக்கு எதிரான கிரிமினல் வழக்கையும்  உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

ஏற்கனவே இதே விவகாரத்தில் கர்நடாகாவிலும் டோனிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து டோனி செய்த மேல் முறையீட்டில் கிரிமினல் வழக்கை நீதிமன்றம் ரத்து செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


இதை ஷேர் செய்திடுங்கள்: