முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் 564 பயனாளிகளுக்கு ரூ.36 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் ப.தனபால் வழங்கினார்கள்.

வியாழக்கிழமை, 20 ஏப்ரல் 2017      திருப்பூர்

               திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில்  நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 564 பயனாளிகளுக்கு ரூ.36 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர்  ச.ஜெயந்தி, .  முன்னிலையில்  தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் ப.தனபால் வழங்கினார்கள்.

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய  சட்டமன்றப் பேரவைத் தலைவர்  பேசியதாவது

மறைந்தும்  மறையாமலும்  மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மறைந்த   தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின் படி செயல்படும் தமிழக அரசு தமிழக மக்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. அரசு அளிக்கின்ற அனைத்து நலத்திட்ட உதவிகளுக்கும்  அம்மா  தான் அடிப்படை காரணியாக விளங்குகிறார். வகுத்த வழியில் தான் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றோம். அந்த வகையில் அவிநாசி தொகுதி மக்களுக்காக இன்று நடைபெறும் நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். பொது மக்களாகிய தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அளிக்கின்ற  மனுக்கள் மீது பரீசீலனை செய்து துரிதமான முறையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், சட்டமன்றப் பொது தேர்தலின்போது  வாக்கு சேகரிக்க சென்றபோது இப்பகுதி மக்கள்  நீண்டநாள் கோரிக்கையான அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தினை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையினை முன் வைத்தனர். அதன்படி, இத்தொகுதி மக்களின் நல்ஆதரவுடன் நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டபின் சட்டமன்றப் பேரவைத்தலைவராக 2-வது முறையாக பதவியேற்ற போது மறைந்த  தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா அவர்களிடம் நான் வைத்த முதல் கோரிக்கையே அவிநாசி - அத்திக்கடவு திட்டமாகும். இத்திட்டத்திற்காக முதற் கட்டமாக ரூ.250ஃ-கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இத்திட்டத்திற்கான  அடிக்கல் நாட்டு விழாவும் விரைவில் நடைபெறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்தொகுதியில், இக்கல்வியாண்டில் மாணவ, மாணவியர்களுக்காக புதிதாக அரசு கலைக்கல்லூரியும் அமையவுள்ளது. குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடற்ற ஏழை , எளிய மக்களுக்காக புதிய பேருந்து நிலையம் அருகில் 1000 அடுக்குமாடி குடியிருப்புகளும் கட்டுவதற்கான நடவடிக்கையும் , புதிய தீயணைப்பு நிலையமும் மற்றும் போக்குவரத்து பணிமனை  அமைப்பதற்கான நடவடிக்கையும் துரிதமான முறையில்  நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவிநாசி தொகுதி பொது மக்களின் அடிப்படை  தேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை முழுமையாக நிறைவேற்றுவேன் எனவும் அரசு அளிக்கின்ற நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொண்டு தங்கள் வாழ்வில் வளம் பெறவேண்டும் என   தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத்தலைவர்  தெரிவித்தார்கள்.

இன்று நடைபெற்ற விழாவில் வருவாய்த்துறையின் சார்பில் 73 பயனாளிகளுக்கு ரூ.11,66,905ஃ- மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களும், 119 பயனாளிகளுக்கு ரூ.14,28,000ஃ- மதிப்பில் முதியோர் உதவித் தொகையினையும், 304 பயனாளிகளுக்கு மின்னனு குடும்ப அட்டைகளும் 15 பயனாளிகளுக்கு அரசுப் பணியில் இல்லை என சான்றும் முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 13 பயனாளிகளுக்கு ரூ.32,250ஃ- மதிப்பில் கல்வி உதவித் தொகையினையும், 2 பயனாளிகளுக்கு ரூ.20,000ஃ- மதிப்பில் திருமண உதவித் தொகையினையும், 2 பயனாளிகளுக்கு ரூ.25,000ஃ- மதிப்பில் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகையினையும், 6 பயனாளிகளுக்கு ரூ. 60,000ஃ- மதிப்பில் இயற்கை மரண உதவித் தொகையினையும், தோட்டக்கலை துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.2,00,000ஃ- மதிப்பில் சிற்பம் கட்டும் கூடத்திற்கான மானியமும், வேளாண்மைத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு  இடுபொருட்களும் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 27 மாற்றுத்திறானாளிகளுக்கு  ரூ.6,26,975ஃ- மதிப்பிலான  நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 564 பயனாளிகளுக்கு ரூ.35,59,130ஃ- மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை  தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத்தலைவர்  வழங்கினார்கள்.

இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஈரோடு மண்டலம் சார்பில் அவிநாசி முதல்  நட்டுக்குட்டையான்புதூர், வையாபுரிக்கவுண்டன்புதூர், கிளாகுளம் பிரிவு மற்றும் சேவூர் வழியாக  நம்பியூர் வரையிலான புதிய பேருந்து வழித்தடத்தினையும்  தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத்தலைவர்  கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.

இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி, திருப்பூர் சார் கலெக்டர் ஷ்ரவன்குமார்  கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கே.வி.எஸ்.குமார், துணை கலெக்டர்கள் சுகவனம், பழனியம்மாள், மாற்றுத்திறனாளிகளின் நல அலுவலர் ஜெகதீசன், அவிநாசி வட்டாட்சியர் விவேகானந்தன், கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் சுப்ரமணியம், சேவூர் வேலுச்சாமி, முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago