முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் கல்வீச்சாளர்களை எதிர்க்கொள்ள நாங்கள் தயார் : மத்தியபிரதேச மாநில பழங்குடியினர் அறிவிப்பு

வியாழக்கிழமை, 20 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

போபால்  - காஷ்மீரில் கல்வீச்சாளர்களை எதிர்க்கொள்ள நாங்கள் தயார் என மத்திய பிரதேச மாநில பழங்குடியினர் அறிவித்து உள்ளனர்.

கற்களை வீசி தாக்குதல்
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி புர்கான் வானி கொல்லப்பட்டதை அடுத்து ஏற்படும் வன்முறை சம்பவங்களில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள், பாகிஸ்தானால் தூண்டிவிடப்படும் நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்துவது தொடர்கிறது. ஸ்ரீநகரில் பாராளுமன்ற இடைத்தேர்தல் நடைபெற்ற போது சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் உள்ளூர் கல்வீச்சாளர்களால் தாக்கப்பட்டது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கற்களை கொண்டு பயன்படுத்தப்படும் ‘ஸ்லிங்ஷாட்’களை கொண்டு கல்வீச்சாளர்களை எதிர்க்கொள்ள நாங்கள் தயார் என மத்திய பிரதேச மாநில பழங்குடியினர் அறிவித்து உள்ளனர்.

அனுமதிக்க வேண்டும்
மத்திய பிரதேச மாநில பழங்குடியின குழு பிரதமர் மோடிக்கு இதுதொடர்பாக கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. அதில் நாங்கள் கல்வீச்சாளர்களை எதிர்க்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மீதான தாக்குதலானது தங்களுக்கு மிகவும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது என ஜாபுவா மாவட்ட பழங்குடியின இளைஞர்கள் கூறிஉள்ளனர். இளைஞர் பானு புரியா பேசுகையில், “நாங்கள் அவர்களுக்கு பதிலடி கொடுப்போம், கற்களை வீசுபவர்களுக்கு கற்களை கொண்டுதான் பதிலடி கொடுக்க வேண்டும், அவர்களை பின்வாங்க செய்வோம்,” என்றார். கோபன்னை (கற்களை வீச அவர்கள் பயன்படுத்தும் உபகரணம்) பயன்படுத்தி கல் வீச்சாளர்களை விரட்டுவோம் என மிகவும் நம்பிக்கையுடன் கூறிஉள்ளார். மேலும் ராணுவத்தில் கோபன் படைகளையும் உருவாக்க வேண்டும் என கூறிஉள்ளார்.

சரமாள வீச முடியும்
கற்களை வைத்து தாக்க ஏதுவாக வலுவான துணி அல்லது ரப்பரின் இருபகுதியிலும் கயிறு கட்டப்பட்டு இருப்பதுதான் கோபன், எதிராளியை தாக்கும்போது கற்களை வைத்துவிட்டு ஒரு சுற்று சுற்றிவிட்டு வீசப்படும், குறிவைக்கப்பட்ட எதிராளியை சரியாக தாக்கும் திறன் கொண்டது. பழங்குடியின மக்கள் இதனை தற்பாதுகாப்பிற்காக பயன்படுத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்த இன்ஸ்பெக்டர் பாஸ்கரே பேசுகையில், “வழக்கமாக ஒரு மனிதர் கல்லை வீசும் நேரத்தில் கோபன்னை பயன்படுத்தி மூன்று கற்களை பயன்படுத்தலாம், மேலும் அதிக தூரம் செல்லக்கூடியது. மேலும் இதில் அனுபவம் வாய்ந்த பழங்குடியினர்களால் நேர்த்தியாக சுமார் 50 மீட்டர் அளவிற்கு கற்களை ஒரே நேரத்தில் சரமாள வீச முடியும்,” என கூறிஉள்ளார்.
மற்றொரு பழங்குடியின வாலிபர் நாவல் சிங் “நாங்கள் நாட்டுப்பற்றாளர்கள், எதிரிகள் நம்முடைய வீரர்களை காயப்படுத்தும் போது எங்களுடைய இரத்தம் கொதிக்கிறது,” என கூறிஉள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்