முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொண்டர்கள் விருப்பத்துக்காகவே சசிகலா குடும்பத்தை விலக்கினோம் : அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

வியாழக்கிழமை, 20 ஏப்ரல் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை  - ஒ.பன்னீர்செல்வத்தின் நிர்பந்தம் இல்லாமல் ஒன்றறை கோடி தொண்டர்களின் விருப்பத்துக்காகவே சசிகலா குடும்பத்தை அ.தி.மு.க.வில் இருந்து விலக்கினோம் என்று நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

முதல் வெற்றி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூடி விவாதித்து அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா குடும்பத்தை விலக்கி வைப்பது என்று முடிவு செய்தனர். இதையடுத்து முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், “சசிகலா குடும்பத்தை அ.தி.மு.க.வில் இருந்து விலக்கி வைப்பதாக எடப்பாடி பழனிசாமி அணியினர் கூறியிருப்பது எங்களின் தர்மயுத்தத்துக்கு கிடைத்த முதல் வெற்றி” என்றார்.

அமைச்சர் மறுப்பு
இதற்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று கூறியதாவது- எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் கூடி பேசி சசிகலா குடும்பத்தை அ.தி.மு.க.வில் இருந்து விலக்கி வைப்பதாக முடிவு எடுத்துள்ளோம். இதற்கு பதில் அளித்த ஓ.பி.எஸ். தர்மயுத்தத்துக்கு கிடைத்த முதல் வெற்றி என்கிறார். ஓ.பி.எஸ்.சின் நிர்ப்பந்தத்தால் நாங்கள் சசிகலா குடும்பத்தை அ.தி.மு.க.வில் இருந்து விலக்கி வைக்கவில்லை. ஒன்றறை கோடி அ.தி.மு.க. தொண்டர்களின் விருப்பத்தின் பேரில் கட்சியின் நலன் கருதி சசிகலா குடும்பத்தை அ.தி.முக.க.வில் இருந்து விலக்கி வைத்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்