நான்கு கால்களுடன் பிறந்த அதிசய கோழிக்குஞ்சு!

வியாழக்கிழமை, 20 ஏப்ரல் 2017      மதுரை
Wonderful chicken born

 திருமங்கலம்.-மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே முற்றிலும் இயற்கைக்கு மாறாக நான்கு கால்களுடன் பிறந்த அதிசய கோழிக்குஞ்சை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.

'நான் புடிச்ச கோழிக்கு நாலு கால்" என்பது கிராமங்களில் நிலவிவரும் வழக்கச் சொல்லில் ஒன்றாகும்.இதனிடையே கிராமத்து வழக்கச் சொல்லை நிஜமாக்கிடும் வகையில் திருமங்கலம் அருகேயுள்ள கிராமமொன்றில் முற்றிலும் இயற்கைக்கு மாறாக நான்கு கால்களுடன் கோழிக்குஞ்சு பிறந்துள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.அதன் விபரம் வருமாறு:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள அச்சம்பட்டி கிராமம்,இந்திரா நினைவு புதுகாலனியைச் சேர்ந்தவர் ராம்கோபால்.கூலித்தொழிலாளியான இவர் தனது மனைவி ஜெயலட்சுமி,குழந்தைகள் பாரதிகண்ணன்,தேவிகாமாட்சி,வெங்கடேஷ்வரன் மற்றும் தாயார் சீதையம்மாள் ஆகியோருடன் வசித்து வருகின்றார்.கோழிகள் வளர்ப்பதில் மிகுந்த ஆர்வமுள்ள சீதையம்மாள் தனது வீட்டில் 10க்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வருகிறார்.இந்நிலையில் சீதையம்மாள் வீட்டில் குஞ்சு பொரிப்பதற்காக முட்டைகளை வைத்து அடைகாத்திருந்த கோழியொன்று நேற்று அதிகாலை ஐந்து குஞ்சுகளை பொரித்துள்ளது.இதையடுத்து ராம்கோபாலும் அவரது குடும்பத்தினரும் புதிதாக பொரித்திருந்த குஞ்சுகளை பார்த்துக் கொண்டிருந்தபோது அதில் ஒருகுஞ்சுக்கு மட்டும் நான்கு கால்கள் இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர்.தாயின் அரவணைப்பிலிருக்கும் இந்த கோழிக்குஞ்சு வழக்கமான இருகால்களை நிலத்தில் ஊன்றி நிற்க முயற்சிக்கும் போது இறகுகளுக்குள்ளிருந்து மேலும் இரண்டு கால்கள் தொங்கியபடி காணப்படுவது இயற்கையான மரபணுகலப்பு நிகழ்வாக கருதப்படுகிறது.


அதிசயப்பிறவியாக பிறந்துள்ள இந்த கோழிக்குஞ்சை தங்களது அதிர்ஷ்டமென கருதி பாதுகாப்புடன் வளர்க்க இருப்பதாக ராம்கோபால் தெரிவித்தார்.தங்களது வீட்டில் அதிசய கோழிக்குஞ்சு பிறந்திருப்பது மகிழ்ச்சியை தருவதாக ராம்கோபாலில் குடும்பத்தினர் தெரிவித்தனர். முற்றிலும் இயற்கைக்கு மாறாக நான்கு கால்களுடன் கோழிக்குஞ்சு பிறந்திருப்பது பற்றி தகவலறிந்த அச்சம்பட்டி பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு வந்து அதிசய கோழிக் குஞ்சை ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.இயற்கை நிகழ்வுகளுக்கு மாறாக நான்கு கால்களுடன் அதிசய கோழிக்குஞ்சு பிறந்திருப்பது திருமங்கலம் பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: