முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்வின்போது மாணவர்கள் வெப்பத்தால் பாதிக்கப்படாமல் தடுக்க கூடுதல் பேருந்துகள் : தலைமை செயலாளர் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 21 ஏப்ரல் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை  - உயர்கல்வி நிறுவனங்களில் தேர்வின்போது மாணவர்கள் வெப்பத்தினால் பாதிக்கப்படாமல் இருக்க அதிகளவில் பேருந்துகள் வசதிகளை மேற்கொள்ள வேண்டுமென தலைமை செயலாளர் கிரிஜா தலைமையில் நடைபெற்ற அதிகாரிகள் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆய்வுக் கூட்டம்
இது குறித்து அவர் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு வருமாறு:- தமிழகத்தில் வெப்ப அலை தாக்கம் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், ஆய்வு தமிழகத்தில் வெப்ப அலை காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்துதலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் தலைமைசெயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன் ஆய்வு செய்தார். இக்கூட்டத்தில் ஏற்கனவே பள்ளிக்கல்வி துறை மூலம் 21-ம் தேதி முதல் அனைத்துபள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளில் கோடை காலசிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அறிவுறுத்தல்
உயர் கல்விநிறுவனங்களில் தேர்வு எழுதும் மாணவர்கள் வெப்ப அலையினால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக போக்குவரத்துத் துறை மூலம்சிறப்பு பேருந்து வசதிகள் மேற்கொள்ள ஆவணசெய்யும்படி அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறே மருத்துவத் துறை சார்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டியது குறித்தும், வெப்ப அலையினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தேவையான மருந்துபொருட்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும்,கால்நடைத் துறை சார்பாக கால் நடைகளுக்கு தேவையான குடிநீர் மற்றும் மருந்துகள் தயார்நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

ஏனைய வசதிகள் ...
தொழிலாளர் நலத்துறை மூலமாக கட்டுமானப் பணியாளர்களுக்கு அளிக்க வேண்டிய அறிவுரைகள் மற்றும் மேற்கொள்ளப்படவேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து தக்கநடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைகள் மூலம் பொதுமக்கள் பெருமளவில் கூடும் இடங்களில் நிழல் பந்தல்கள் மற்றும் தண்ணீர் பந்தல்கள் அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டது. மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி வேலைவாய்ப்புத் திட்டப் பணியில்ஈடுபட்டு வரும் பணியாளர்களுக்கு குடிநீர் வசதி மற்றும் நிழல் பந்தல் வசதி ஏற்படுத்திதரப்பட்டுள்ளது. இதனை ஊரக வளர்ச்சித் துறை உரிய முறையில் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டது.

உரிய கண்காணிப்பு
அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் வெப்ப அலையின் தாக்கத்தினை எதிர்கொள்வதற்கான செயல் திட்டம் தயாரித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இது தொடர்பாக உரிய அறிவுரைகள் வருவாய்த்துறை மூலம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட அறிவுரைகளுக்கேற்ப வெப்ப அலை தாக்கம் குறித்து உரிய கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

அலுவலர்கள் பங்கேற்பு
இக்கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலர், ஊரக வளர்ச்சித்துறை செயலாளர்ஹன்ஸ்ராஜ் வர்மா, முதன்மைச் செயலர், வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால்முதன்மை செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்வழங்கல் துறை செயலாளர், ஹர்மர்தர் சிங், உயர்கல்வி துறை செயலாளர்,சுனில் பாலிவால், பள்ளிக்கல்வித் துறை செயலாளர்உதய சந்திரன்., வேளாண்மை துறை செயலாளர், ககன் தீப் சிங்பேடி,தேசிய ஊரக சுகாதார இயக்க திட்ட இயக்குநர் தரேஸ் அகமது, பேரிடர்மேலாண்மை இயக்குநர், ஜி. லதாமற்றும் பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி, பேரிடர் மேலாண்மை இணை இயக்குநர். கந்தசாமி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago