முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலாய்லாமா விவகாரத்தில் தொடர் மோதல்: இந்தியாவுக்கு சீனா மீண்டும் எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 21 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

பெய்ஜிங்  - தலாய்லாமாவை மையப்படுத்தி இந்தியா தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியா நிராகரிப்பு
திபெத்தை தங்கள் நாட்டின் ஒரு மாநிலம் என்று கூறி கட்டுப்பாட்டில் வைத்துள்ள சீனா, அருணாசலப் பிரதேசத்தை தெற்கு திபெத் என்று கூறி உரிமை கொண்டாடி வருகிறது. திபெத்தை சீனா ஆக்கிரமித்ததை அடுத்து கடந்த 1959-ஆம் ஆண்டு தலாய் லாமா இந்தியாவுக்கு வந்து விட்டார். இதையடுத்து, அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியா மீது அப்போது போர் தொடுத்து எல்லையில் சில பகுதிகளைக் கைப்பற்றியது. இப்போது வரை தலாய் லாமாவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்றே சீனா வலியுறுத்தி வருகிறது. ஆனால், சீனாவின் கோரிக்கையை இந்தியா நிராகரித்துவிட்டது.

சீனா கடும் எதிர்ப்பு
இதற்கிடையில், திபெத்திய புத்த மத தலைவர் தலாய்லாமா அண்மையில் அருணாச்சல பிரதேசம் சென்றார். இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், சீனாவின் எதிர்ப்பை நிராகரித்த இந்தியா தலாய்லாமா பயணத்தை ரத்து செய்ய மறுத்துவிட்டது. இதனால், இந்தியா மீது அதிருப்தி அடைந்த சீனா, அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 6 இந்திய பகுதிகளுக்கு, புதிய பெயர்களை சூட்டியது. இதனால், இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் பதட்டம் ஏற்பட்டது.

கடுமையான விளைவு
இந்த நிலையில் அருணாச்சல பிரதேசத்தில் தலாய் லாமாவை அனுமதித்ததற்கான தண்டனையை இந்தியா பெறும் என்று சீனா நாளேடு எச்சரித்துள்ளது.  சீன அரசின் நாளேட்டில் இது குறித்து கூறப்பட்டு இருப்பதாவது:- ’’தலாய் லாமா விவகாரத்தில் இந்தியா தொடர்ச்சியாக, விரோதம் காட்டிவருகிறது. இதனால், தெற்கு திபெத்தை நாம் மீட்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் இரட்டைவேட அரசியல், அந்நாட்டுக்கே பாதகமான விளைவுகளை தேடித்தரும். இதற்கான விளைவு கடுமையானதாக இருக்கும்,’’ என்று எச்சரித்து தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்