முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சரக்கு விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது சீனா !

வெள்ளிக்கிழமை, 21 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

பெய்ஜிங்  - விண்வெளியில் உள்ள ஆய்வு நிலையத்துக்கு தேவையான பொருட்களை ஏற்றி செல்வதற்காக முதன்முதலாக ’டியான்ஸோ-1’ சரக்கு விண்கலத்தை தயாரித்த சீனா அதை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

‘டியாங்காங் 1’
விண்வெளியில் நிரந்தரமான ஆய்வு நிலையத்தை நிறுவிட திட்டமிட்டுள்ள சீனா கடந்த 2013-ம் ஆண்டு ‘டியாங்காங் 1’ என்ற ஆய்வு விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலத்தில் சென்ற மூன்று சீன விஞ்ஞானிகள் 15 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளை நடத்தி முடித்து, வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர்.

‘டியாங்காங் 2’
இந்நிலையில், ஜிகுவான் மாகாணத்தில் உள்ள கோபி பாலைவனம் பகுதியில் இருந்து ‘டியாங்காங் 2’ என்ற விண்கலத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதனையடுத்து, ’ஷென்ஸோ 11’ என்ற விண்கலத்தில் 2 விஞ்ஞானிகளை விண்வெளிக்கு அனுப்பி ‘டியாங்காங் 2’ விண்கலத்துடன் ’ஷெங்ஸோ 11’ இணைத்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான அடுத்தகட்ட திட்டத்தை சீனா மேற்கொண்டது. இதன்படி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17-ம் தேதி காலை 7.30 மணியளவில் ’ஷெங்ஸோ 11’ விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 

வெற்றிகரமாக ...
இந்நிலையில், இந்த ஆய்வு நிலையத்துக்கு தேவையான பொருட்களை ஏற்றி செல்வதற்காக சரக்கு விண்கலம் ஒன்றை சீனா தயாரித்தது. ’டியான்ஸோ-1’ என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலம், திரவ நிலையில் இருக்கும் பிராண வாயு மற்றும் மண்ணெண்ணையினால் இயங்கும் ராக்கெட் மூலம் நேற்று முன்தினம் விண்ணில்செலுத்தப்பட்டது. இந்நிலையில், சீனாவின் தென்பகுதியில் உள்ள ஹைனான் தீவில் உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் இரவு 7.41 மணியளவில் ’டியான்ஸோ-1’ விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்