முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மைய அமைப்பாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம்

வெள்ளிக்கிழமை, 21 ஏப்ரல் 2017      கரூர்

கரூர் மாவட்டத்தில், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ், பள்ளி சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள 143 அமைப்பாளர் காலிப்பணியிடங்களுக்கு ரூ.2500-5000+தர ஊதியம் ரூ.500 என்ற சிறப்பு ஊதிய விகிதத்தின் கீழ் நேரடி நியமனம் மூலம் நிரப்பிட பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

40 வயது


கல்வித்தகுதி  - பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பத்தாம்  வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினராக இருப்பின் எட்டாவது தேர்ச்சி/தோல்வி பெற்றிருக்க வேண்டும்.வயது வரம்பு  - பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர்களுக்கு 21 வயது பூர்த்தியடைந்து 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். பழங்குடியினர் 18 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு  மிகாதவராகவும் இருக்க வேண்டும்.  விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.காலியாகவுள்ள பணியிடங்கள் அரசு ஆணைகளின்படி நிரப்பப்படும். கல்வித்தகுதி, இருப்பிடம், சாதி, விதவை / கணவரால் கைவிட்டோர் மற்றும் இதர முன்னுரிமை முதலியவற்றுக்கான ஆதார சான்று நகல் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.

நியமன பணியிடத்திற்கும், விண்ணப்பதாரர் குடியிருப்புக்கும் இடையே உள்ள துhரம் 3 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும். காலியிடம் உள்ள பள்ளி, அப்பள்ளிகளுக்கான இனசுழற்சி விபரம், சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி அலுவலகங்களில் ஓட்டப்பட்டிருக்கும், விண்ணப்பநகல், சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் இலவசமாக கிடைக்கும். ஏற்கனவே, பள்ளி சத்துணவு மைப்பாளர் பணி வேண்டி மக்கள் குறை தீர்க்கும் நாள், மனுநீதி நாள்,  முதலமைச்சர் தனிப்பிரிவு ஆகியவற்றில் விண்ணப்பித்திருந்தாலும், தற்போது மீண்டும் உரிய விண்ணப்பத்தினை முறையாக பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். முன்னதாக எவ்வகையிலும் சமர்ப்பித்த விண்ணப்பங்கள், பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.வயது வரம்பு முதலியன 31.03.2017 ஆம் தேதியினை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய / நகராட்சி ஆணையாளர்களுக்கு 10.05.2017 ஆம் தேதி அலுவலக வேலை நேரத்திற்குள் கிடைக்கப் பெறும் வகையில் அனுப்பப்பட வேண்டும். இதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்