முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் மாவட்டத்தில் நடைப்பெற்று வரும் வறட்சிப் நிவாரண பணிகள் ஆய்வு கூட்டம்: அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபில் தலைமையில் நடைபெற்றது

வெள்ளிக்கிழமை, 21 ஏப்ரல் 2017      வேலூர்

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேலூர் மாவட்டத்தில் நடைப்பெற்று வரும் வறட்சிப் நிவாரண பணிகள், குடிநீர் திட்டங்கள் மற்றும் ஊரக வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்  வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி  மற்றும்  தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.நிலோபர் கபில்  தலைமையில் நடைபெற்றது.இந்த ஆய்வு கூட்டத்திற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் வருவாய் நிர்வாக இணை ஆணையர் எம்.லட்சுமி. முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் கலெக்டர் சி.அ.ராமன்,  வரவேற்று பேசினார். இக்கூட்டத்தில்  வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி  பேசியதாவது:-

 மறைந்த  தமிழக முதல்வர் அம்மா அவர்களின் நல்லாசியுடன் செயல்பட்டு வரும் தமிழக அரசு இந்தாண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் கடும் வறட்சியை சமாளித்திட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண உதவிகளும் பொதுமக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க தேவையான உடனடி நிதியுதவிகளையும் போர்க்கால அடிப்படையில் வழங்கி வறட்சி காலத்தை சமாளித்து வருகிறது. தற்போது தமிழக அரசு அனைத்து திட்டப்பணிகளை காட்டிலும் குடிநீர்ப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து பணியாற்ற அறிவுரைகள் வழங்கி அதன்படி அனைவரும் செயலாற்றி வருகிறீர்கள். இருந்த போதிலும் மேலும் அதிக கவனம் செலுத்தி மாவட்டத்தில் எங்கெல்லாம் குடிநீர்ப் பிரச்சனை ஏற்படுகிறதோ அவற்றை தீர்;த்து போர்க்கால அடிப்படையில் பணியாற்றி பொதுமக்களுக்கு உதவிட வேண்டுமென்று சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு  வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர்  உத்திரவிட்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் வருவாய் நிர்வாக இணை ஆணையர் எம்.லட்சுமி,  பேசியதாவது:- வேலூர் மாவட்டத்தில் மேட்டூர் கூட்டு குடிநீர்த் திட்டத்தின் மூலமாக குடிநீர் மாநகராட்சி, நகராட்சி, மற்றும் ஊராட்சி ஒன்றிய கிராமப்பகுதிகளில் திட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ள பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அளவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அந்தந்த பகுதிகளுக்குட்பட்ட துறைகளின் மூலமாக சொந்த ஆழ்துளை கிணறுகள் வாயிலாகவும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வழங்கப்படும் குடிநீரானது பகுதியின் முதல் இடத்திலிருந்து கடைசி இடம் வரை ஒரு குடும்பத்திற்கு ஒதுக்கப்பட்ட குடிநீரின் அளவு கிடைக்கின்றதா என்பதை ஆய்வு செய்து சீரான குடிநீர் விநியோகம் நடைபெறுவதை அலுவலர்கள் கட்டாயமாக உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு பொதுமக்களுக்கு குடிநீர் சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றால் அதற்கான நடவடிக்கைகளை உரிய நேரத்தில் மேற்கொள்ள அலுவலர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும்.  மேலும் இவற்றில் ஏதேனும் குறைகளோ ஆலோசனைகளோ இருந்தால் அவற்றை கலெக்டர்  மூலமாக தெரிவிக்கலாம் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் வருவாய் நிர்வாக இணை ஆணையர் எம்.லட்சுமி, இ.ஆ.ப.,   தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கலெக்டர் சி.அ.ராமன்,  திட்டப்பணிகள் குறித்து விவரித்ததாவது:-
 வேலூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் சராசரி மழையின் அளவை விட குறைந்தளவே கிடைக்கப்பெற்றுள்ளது. இதனால் வறட்சி ஏற்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சனையை போக்க 3 மாதங்களுக்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்கவும், செயலிழந்த ஆழ்துளை கிணறுகளை சீரமைத்து குடிநீரை பெற பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. மேட்டூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் ஜீன் மாதம் வரை குடிநீர் சீராக வழங்க நீராதாரம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வறட்சி காலத்தை எதிர்கொள்ள ஊராட்சிகள் மூலம் 32 பணிகள்;, 14-வது நிதிக்குழு நிதியின் மூலம் 62 பணிகள்;, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் 76 பணிகள்;, ஊராட்சி ஒன்றிய நிதியின் மூலம் 33 பணிகள், மாவட்ட ஊராட்சி நிதியின் மூலம் 4 பணிகள், சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் 65 பணிகளும், நாடாளுமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் 16 பணிகளும் ஆக மொத்தம் 288 பணிகள் ரூ.11 கோடி மதிப்பீட்டில் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இவற்றில் 157 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ள 131 பணிகள் விரைவாக முடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மாநகராட்சி, நகராட்சி, மற்றும் ஊராட்சி ஒன்றிய கிராமப்பகுதிகளில் வீடுகளுக்கு வழங்கப்பட்டுவரும் குடிநீர் இணைப்புகள் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டு அனைவருக்கும் சீராக வழங்கிட நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தின் வாயிலாக சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை மனதில் கொண்டு அவற்றை நிறைவேற்றி பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர்  இக்கூட்டத்தில் தெரிவித்தார்.

 இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் என்.ஜி.பார்த்திபன், ஆர்.பாலசுப்பிரமணி, ஜி.லோகநாதன், ஜெயந்தி பத்மநாபன், பா.கார்த்திகேயன், ஏ.பி.நந்தகுமார், ஜே.எல்.ஈஸ்வரப்பன், ஏ.நல்லதம்பி, மாவட்ட வருவாய் அலுவலர் மரு.தா.செங்கோட்டையன், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) பெ.பெரியசாமி, திருப்பத்தூர் சார் கலெக்டர் மரு.கார்த்திகேயன், இ.ஆ.ப., மாவட்ட வன அலுவலர்கள் சுமேஷ் சோமன், தேஜஸ்ஸ்ரீ, ஆவின் தலைவர் வேலழகன், வருவாய் கோட்டாட்சியர்கள் அஜய் சீனிவாசன், இரா.இராஜேஸ்வரி, மாநகராட்சி ஆணையாளர் குமார், மண்டல இயக்குநர் நகராட்சி நிர்வாகம் குபேந்திரன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திருமேனி, (ஊராட்சிகள்) விஜயகுமாரி, அனைத்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்