முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர் பதற்றம் எதிரொலி: வடகொரியாவின் எல்லைப் பகுதியில் ரஷ்யா ராணுவம் குவிப்பு

வெள்ளிக்கிழமை, 21 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

மாஸ்கோ  - வடகொரியாவின் எல்லைப் பகுதியில் ரஷ்யா தனது ராணுவத்தை குவித்து வருவதால் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஏவுகணை சோதனை
வடகொரியா அண்மையில் ஏவுகணை சோதனை மேற்கொண்டது, ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இருந்தபோதிலும் அது தொடர்பான சோதனையை இன்னும் ஒருவாரத்தில் முடிக்க வேண்டும் என்று வடகொரியா ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. பல்வேறு நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரிய அணுகுண்டு சோதனையில் செயல்பட்டு வருவதாக அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது.

டிரம்ப் எச்சரிக்கை
வடகொரியாவின் இந்த செயல்பாடுகளை சீனா கண்டிக்க வேண்டும் என்றும், அப்படி கண்டிக்கவில்லை என்றால் அமெரிக்கா சில விபரீதமான முடிவுகளை எடுக்க நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் ரஷ்யா தனது ராணுவ வீரர்கள் மற்றும் பீரங்கிகள் போன்றவைகளை வடகொரியாவின் எல்லை பகுதியில் நிறுத்தியுள்ளது. அது தொடர்பான வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.

ரஷ்யாவுக்கு பாதிப்பு
இதே போன்று சீனாவும் அதன் எல்லைப் பகுதியில் 1,50,000 இராணுவவீரர்களை நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் அமெரிக்கா வடகொரியாவின் அணுகுண்டு தொழிற்சாலையில் எந்த நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்பட்டது. அவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டால், ரஷ்யாவுக்கும் பெரிய பாதிப்பு ஏற்படும்.

ராணுவம் குவிப்பு
ஏனெனில் ரஷ்யாவுக்கும், வடகொரியாவுக்கும் இடையில் 11 மைல் நீள எல்லைதான் உள்ளது. இதனாலேயே ரஷ்யா எச்சரிக்கையுடன் இருப்பதற்கு இராணுவத்தை எல்லையில் குவித்துள்ளது. மேலும் அமெரிக்கா மற்றும் வடகொரியாவிற்கு இடையே போர் ஏற்பட்டு விட்டால், உடனடியாக அங்கிருக்கும் அகதிகள் ரஷ்யாவிற்குள் நுழைவதற்கு வாய்ப்பு உண்டு. இதன் காரணமாகவும், இராணுவத்தை குவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனாவும் அதன் எல்லைப் பகுதியில் 1,50.000 இராணுவவீரர்களை குவித்துள்ளதால், எல்லைப் பகுதிகளில் சற்று பதற்றமான சுழல் உருவாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago