முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், பைசுஅள்ளி கிராமத்தில் அம்மா திட்ட முகாம்: கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில் நடைபெற்றது

வெள்ளிக்கிழமை, 21 ஏப்ரல் 2017      தர்மபுரி

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம்  வட்டம், பைசுஅள்ளி கிராமத்தில் அம்மா திட்ட முகாம் மாவட்ட கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில் இன்று (21.04.2017) நடைபெற்றது.இம்முகாமில் மருத்துவ சுகாதார பணிகள் சார்பில் நிலவேம்பு குடிநீர், கால்நடை துறை, சமூக பாதுகாப்புத் துறை. ஊரக வருவாய்த்துறை, தோட்டக்கலைத்துறை ஆகிய துறைகளின் மூலம் அமைக்கப்பட்டிருந்து கண்காட்சியினை பார்வையிட்டும், பின்னர் புதிய குடும்ப அட்டை, ஜாதி சான்று, வருமான சான்று, பட்டா சிட்டா பெயர் மாற்றம் என பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று கலெக்டர் கே.விவேகானந்தன், தெரிவித்ததாவது.      தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க அம்மா திட்ட முகாம் தருமபுரி மாவட்டத்தில் 470 கிராமங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. வாரந்தோறும் வட்டங்கள் வாரியாக கிராமங்களைத் தேர்வு செய்து தற்போது முக்கல்நாய்க்கன்பட்டி கிராமத்தில் அம்மா திட்ட முகாமில் மக்களிடத்தில் மனுக்களைப் பெற்று உடனடி தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்கு மற்றும் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ரூ. 7.50 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இக்கிராமத்தில்; கால்வாய்கள் தூர் வாருவதற்கு ரூ. 19 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் திறந்த வெளி கழிப்பிடத்தை பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கத்தில் 600 திறந்த வெளி கழிப்பிடங்கள் ஒதுக்கப்பட்டு 150 கழிப்பிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் 450 கழிப்பறைகள் கட்டுவதற்கு பயனாளிகளிடமிருந்து மனு பெறப்பட்டு வருகிறது.   கால்நடை வளர்ப்போர்கள் பயனடையும் வகையில் 2011-12 முதல் 2015-16ம் ஆண்டு வரை மாநில  தீவன அபிவிருத்தி திட்டம் மற்றும் மத்திய விரைவு தீவன அபிவிருத்தி திட்டங்களின்  மூலம் தர்மபுரி மாவட்டத்தில் 75410 பயனாளிகளுக்கு  ரூ.79.46 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் வறட்சி நிவாரண திட்டத்தின்கீழ் தருமபுரி மாவட்டத்தில் காரிமங்கலம், செட்டிகரை, இண்டூர், நல்லம்பள்ளி, பென்னாகரம், பாப்பாரபட்டி, மாரண்டஅள்ளி, மகேந்திரமங்கலம், அரூர், மொரப்பூர், மோளையானூர் மற்றும் புட்டிரெட்டிபட்டி ஆகிய 12 பகுதிகளில் உலர் தீவனக் கிடங்குகள் ஆரம்பிக்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது.  உலர் தீவனக் கிடங்குகளில் உலர் தீவனம் (வைக்கோல்) விற்பனை கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் நடைபெற்று வருகிறது.. அதில் அனைத்து கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரிடமிருந்து உரிய உலர் தீவன விற்பனை செய்யும் அட்டைகளை பெற்று, உலர் தீவனம் வழங்கும் தீவனக் கிடங்குகளிலிருந்து உலர் தீவனம் பெற்று பயனடைந்து வருகின்றனர். கால்நடை பராமரிப்புத்துறையின் அலுவலர்கள் உலர் தீவன கிடங்குகளில் வழங்கப்படும் உலர் தீவனம் நல்ல தரமானதாக உள்ளதா என்று ஆய்வு செய்து  வழங்கப்படவிருக்கும் வைக்கோல் நல்ல தரமானதாக இருந்தால் மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.  மேலும் கால்நடை வளர்ப்போர்கள் பயனடையும் வகையில் 2011-12 முதல் 2015-16ம் ஆண்டு வரை மாநில  தீவன அபிவிருத்தி திட்டம் மற்றும் மத்திய விரைவு தீவன அபிவிருத்தி திட்டங்களின்  மூலம் தர்மபுரி மாவட்டத்தில் 75410 பயனாளிகளுக்கு  ரூ.79.46    கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது   மாவட்ட கலெக்டர் கே.விவேகானந்தன்,  தெரிவித்தார்.இம்முகாமில்  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  இரா. சண்முகசுந்தரம், வட்டாட்சியர்  கண்ணன், வருவாய் உதவி  ஆய்வாளர்  காமராஜ், கால்நடை உதவி மருத்துவர்                             மரு. கௌதம், கிராம நிர்வாக அலுவலர்   கோகிலா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்