முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வறட்சிப் பணிகள் மற்றும் குடிநீர்த்திட்டப் பணிகள் தொடர்பாக துறை அலுவர்களுடனான ஆய்வுக் கூட்டம் : அமைச்சர் மணியன் தலைமையில் நடைபெற்றது

வெள்ளிக்கிழமை, 21 ஏப்ரல் 2017      நாகப்பட்டினம்
Image Unavailable

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வறட்சிப் பணிகள் மற்றும் குடிநீர்த்திட்டப் பணிகள் தொடர்பாக துறை அலுவர்களுடனான ஆய்வுக் கூட்டம் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் வருவாய்த்துறை அரசுச் செயலாளர் பி.சந்திரமோகன், மாவட்ட கலெக்டர் சு.பழனிசாமி, ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

குடிநீர் ஆதாரங்கள்

இந்த ஆய்வுக் கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் தெரிவித்ததாவது, தமிழகத்தில் வறலாறு காணாத வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது. வறட்சியினை சமாளிப்பதற்கு அரசு அலுவலர்கள் அனைவரும் முழுவீச்சில் செயல்படவேண்டும். நகராட்சி மற்றும் பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் வழங்கப்பட்டுள்ள முறையற்ற குடிநீர் இணைப்புக்கள் துண்டிக்கப்பட வேண்டும். குடிநீர் ஆதாரங்களை அடையாளம் கண்டு, அதற்கேற்ற ஏற்;பாடுகளைச் செய்து, பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கிட முழுவீச்சில் செயல்பட வேண்டும். விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வறட்சி நிவாரணங்களில் தொய்வு நிலை இல்லாமல், அவர்களது வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட வேண்டும். வறண்ட நிலையில் இருக்கின்ற குளங்கள், குட்டைகளை இப்போதே தூர்வாறுவதற்கு உரிய நடவடிக்கைகளை அனைத்து அலுவலர்களும் மேற்கொள்ள வேண்டும்

 

வறட்சி ஏற்படும் காலங்களில் மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு நன்கு சுத்தமான, சுகாதாரமான, குறைபாடு இல்லாத குடிநீர் வழங்கப்பட வேண்டும். 100 சதவீதம் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பாதுகாப்பான குடிநீர் கிடைத்திடும் வகையில், போதுமான ஆழ்துளை கிணறுகள் அமைக்க வேண்டும். அரசுத் திட்டத்தைப் பயன்படுத்தி, விவசாயம் சார்ந்த தொழில்கள் வளம் பெறும் வகையில் துறை சார்ந்த அலுவலர்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட பணிகளின் அடிப்படையில் பயனாளிகளுக்கு அவர்களது தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்பட வேண்டும். அதற்கான உரிய நடவடிக்கைகளை அரசு அலுவலர்கள் உடனே செய்திட வேண்டும்." என்று தெரிவித்தார். வருவாய்த்துறை அரசுச் செயலாளர் பி.சந்திரமோகன் தெரிவிக்கையில், " குடிநீர்ப் பிரச்சனைகளுக்கு தனி கவனம் செலுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்குவதற்கு, உரிய ஏற்பாடுகளை செய்து தரவேண்டும். இதெபோல் கால்நடைத்துறை மூலம், கால்நடைகளுக்கு வழங்கப்பட வேண்டிய குடிநீர் அளவினை தடையின்றி வழங்க வேண்டும்.

இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர்.கோபால், சட்;டமன்ற உறுப்பினர்கள் எஸ.;பவுன்ராஜ் (பூம்புகார்), வி.ராதாகிருஷ்ணன் (மயிலாடுதுறை), மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.கருணாகரன்,மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமை திட்ட இயக்குநர் சங்கர், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்