முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் மாவட்டத்தில் வங்கியாளர்களுக்கான கடன் திட்டத்தின்படி ரூ.3ஆயிரம் கோடி இலக்கு

வெள்ளிக்கிழமை, 21 ஏப்ரல் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற வங்கியாளர்கள் கூட்டத்தில்; மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் நபார்டு வங்கியின் வளம் சார்ந்த வங்கி கடன் திட்டத்தின் அடிப்படையில் மாவட்ட முன்னோடி வங்கியால் தயாரிக்கப்பட்ட 2017-2018-ஆம் ஆண்டிற்கான ராமநாதபுரம் மாவட்ட வங்கியாளர்களுக்கான கடன் திட்ட கையேட்டினை  வெளியிட்டார். தொடர்ந்து மாவட்ட தொழில் மையம் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் புதிய தொழில் முனைவோருக்கான கடனுதவி வழங்கும் திட்டங்களின் கீழ் கடனுதவிகள் வழங்கி திட்டங்களை நிறைவேற்றுவதில்  சிறப்பாக செயல்பட்ட  வங்கிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். இக்கூட்டத்தில்  மாவட்ட கலெக்டர் தெரிவித்தாவது:-மாவட்ட முன்னோடி வங்கியின் மூலம் மாவட்டத்தில் உள்ள வங்கியாளர்களுக்கு 2017-2018-ஆம் ஆண்டிற்கான கடன் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.
    இந்த திட்டமானது மொத்தம் 3465.44 கோடிக்கு முன்னுரிமைக் கடன்களுக்கு  அனைத்து வங்கிகளுக்கும் (பொதுத்துறை, தனியார், கூட்டுறவு வங்கிகள் மற்றும் வட்டார கிராம வங்கிகள்) தனித்தனியே இலக்கு நிர்ணயிக்கப்;பட்டுள்ளது.  இந்த தொகையானது சென்ற ஆண்டிற்கான கடன் திட்ட இலக்குகளைக் காட்டிலும் 10.03 சதவிகிதம் அதிகம். நமது மாவட்டத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளதால் அதிகபட்சமாக விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த கடன்களுக்கு ரூ.2250.15 கோடி (64.93 சதவீதம்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
 குறிப்பாக சிறு மற்றும் குறுந்தொழிற்களுக்கான கடன்களுக்கு ரூ.162.33 கோடியும், கல்விக் கடன்களுக்கு ரூ.360.00 கோடியும், வீட்டு வசதிக் கடன்களுக்கு ரூ.372.00 கோடியும், ஏற்றுமதி கடன்களுக்கு ரூ.21.00 கோடியும், புதுப்பிக்கக் கூடிய (எரிசக்தி) கடன்களுக்கு ரூ.28.88 கோடியும், சமூக அடிப்படைக் கட்டமைப்பு கடன்களுக்கு ரூ.47.03 கோடியும், பிற முன்னுரிமைக் கடன்களுக்கு ரூ.224.05 கோடியும் என மொத்தம் ரூ.1215.29 கோடி மதிப்பில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.  
 இதுதவிர, மாவட்ட தொழில் மையத்தின் மூலம் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 2016-17 -ஆம் ஆண்டில்  93 நபர்களுக்கு ரூ.42.95 இலட்சம் மானியத்துடன் கூடிய ரூ.172 இலட்சத்திற்கான புதிய திட்டங்கள் தொடங்க வங்கிகளால்  கடன் வழங்;கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினை சிறப்பான வகையில் நிறைவேற்றுவதில் முதலிடம் வகித்த  இந்தியன் ஓவர் சீஸ் வங்கி, இரண்டாம் இடம் வகித்த யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கி மற்றும் மூன்றாம் இடம் வகித்த இந்தியன் வங்கி ஆகியோருக்கு மாவட்ட கலெக்டர் கேடயம் வழங்கி பாராட்டினார்.
    அதே போல, புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2016-17 -ஆம் ஆண்டில்  27 நபர்களுக்கு ரூ.192.26 லட்சம் மதிப்பிலான மானியத்துடன் கூடிய ரூ.769 லட்சத்திற்கான புதிய கடன் திட்டங்கள் வங்கிகளால் ஒப்புதலளிக்கப்பட்டுள்ளது.  இந்த திட்டத்தினை சிறப்பான வகையில் நிறைவேற்றுவதில் முதலிடம் வகித்த  யூனியன் பாங்க் ஆப் இந்தியா,இரண்டாம் இடம் வகித்த இந்தியன் வங்கி மற்றும் மூன்றாம் இடம் வகித்த இந்தியன் ஓவர் சீஸ் வங்கி  ஆகியோருக்கு மாவட்ட கலெக்டர் கேடயம் வழங்கி பாராட்டினார்.
  மேலும்  பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 2016-17 -ஆம் ஆண்டில் 42 நபர்களுக்கு ரூ.79.52 லட்சம் மானியத்துடன் கூடிய புதிய கடன் திட்டங்களுக்கு வங்கிகளால் கடன் வழங்;கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினை சிறப்பான வகையில் நிறைவேற்றுவதில் முதலிடம் வகித்த இந்தியன் வங்கி, இரண்டாம் இடம் வகித்த கார்பரேஷன் வங்கி மற்றும் மூன்றாம் இடம் வகித்த சிண்டிகேட் வங்கி ஆகியோருக்கு மாவட்ட கலெக்டர் கேடயம் வழங்கி பாராட்டினார். மேலும், யு.ஒய்.இ.ஜி.பி, பி.எம்.ஐp.பி மற்றும் நீட்ஸ் திட்டங்களை நிறைவேற்றுவதில் மாவட்ட தொழில் மையத்தோடு இணைந்து சிறப்பாக செயல்பட்ட முன்னோடி வங்கி மேலாளர் சுரேஸ்பாபு அவர்களுக்கும் உடனுக்குடன் வங்கிக் கடன் பெறுவோருக்கு உரிய பயிற்சிவழங்கிய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய தொழிற் பயிற்சி மற்றும் சுயவேலை வாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் சியாமளநாதன் ஆகியோருக்கும் பாராட்டு சான்றிதழ்  வழங்கப்பட்டது.
 இக்கூட்டத்தில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பி.மாரியம்மாள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி, நபார்டு வங்கி மேலாளர் மதியழகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், சுரேஸ்பாபு, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ப.மாரியம்மாள்,  ராமநாதபுரம் கிளை மேலாளர் குணசேகரன்;, பாங்க் ஆப் இந்திய கிளை மேலாளர் அன்பு இளங்கோ, சிண்டிகேட் வங்கி மேலாளர் நாராயணன் இந்தியன் வங்கி பாரதிநகர் கிளை மேலாளர் ரகு மற்றும் பல்வேறு  வங்கி கிளை மேலாளர்களும் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago