முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சரசோட்டா ஓபன் டென்னிஸ்: வெளியேறியது லியாண்டர் பெயஸ் ஜோடி

வெள்ளிக்கிழமை, 21 ஏப்ரல் 2017      விளையாட்டு
Image Unavailable

புளோரிடா  - சரசோட்டா ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவு கால்இறுதி ஆட்டத்தில் லியாண்டர் பெயஸ்-ஆந்த்ரே சா ஜோடி ஸ்டீபன் கோஸ்லோவ்-பீட்டர் போலான்ஸ்கி இணையிடம் தோல்வி கண்டு வெளியேறியது. சரசோட்டா ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.  இதில் நேற்று முன்தினம் நடந்த இரட்டையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் லியாண்டர் பெயஸ் (இந்தியா)-ஆந்த்ரே சா (பிரேசில்) ஜோடி 6-3, 3-6, 7-10 என்ற செட் கணக்கில் ஸ்டீபன் கோஸ்லோவ் (அமெரிக்கா)-பீட்டர் போலான்ஸ்கி (கனடா) இணையிடம் தோல்வி கண்டு வெளியேறியது.  இந்த ஆட்டம் 1 மணி 29 நிமிடம் நீடித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்