முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீமைகரு வேலமரம் ஒழிப்பு பேரணி: தாசில்தார் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது

வெள்ளிக்கிழமை, 21 ஏப்ரல் 2017      வேலூர்
Image Unavailable

   சீமைகரு வேலமரம் முற்றிலுமாக ஒழிக்கபட வேண்டுமென வலியுறுத்தும் பேரணிக்கு தாசில்தார் பாஸ்கரன் தலைமை ஏற்று திரளான மாணவர்களின்; ஊர்வலம் அரக்கோணம் நகரில் நடந்தேறியது. இது குறித்து விவரம் வருமாறு. வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகரம், சுவால்பேட்டை பகுதியில் தாலுக்கா அலுவலகம் அமைந்து உள்ளது.     இந்த அலுவலகம் முன்பாக செல்வம் மெட்ரிக் மேனிலைப் பள்ளி, ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக் மேனிலைப் பள்ளி, உள்ளிட்ட நான்கு பள்ளிகளச் சேர்ந்த மாணவர்கள் சுமார் 300 பேர் வரையில் திரண்டனர். தமிழகத்தில் வறட்சியை உருவாக்கி தண்ணீர் பஞ்சத்திற்கு காரணமான சீமை கருவேல மரங்களை வேரோடு அழிக்கபட வேண்டுமென வலியுறுத்தும் பதாகைகளுடன் மாணவர்கள் பேரணி நடைபெற்றது.   வருவாய்துறை சார்பி;ல் ஏற்பாடு செய்யபட்ட சீமை கருவேல மரம் ஒழிப்பு பேரணிக்கு தாசில்தார் பாஸ்கரன் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு தாசில்தார் ஜெயந்தி வரவேற்றார். செல்வம் பள்ளி தாளாளர் செல்வம், ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக் மேனிலைப் பள்ளி முதல்வர் தாமோதரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர்கள் அருள்செல்வம், மற்றும் ரஜினிகாந்த், அரக்கோணம் டவுன் கிராம அலுவலர் லட்சுமிநாராயணன், அலுவலக உதவியாளர் குமார், உட்பட திரளான சமூக ஆர்வலர்கள் பலர் பேரணியில் உடன் சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்