முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் மாவட்டத்தில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.60 லட்சம் மதிப்பிலான சிறப்பு சர்கர நாற்காலிகள்: கலெக்டர் வா.சம்பத், வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 21 ஏப்ரல் 2017      சேலம்
Image Unavailable

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சக்கர நாற்காலியை இன்று (21.04.2017) கலெக்டர் வா.சம்பத், வழங்கினார். இது குறித்து கலெக்டர்  தெரிவித்ததாவது :               தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கென பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து பயண அட்டை, கண் பார்வை இழந்தோருக்கு மூக்கு கண்ணாடி, கால் பாதிக்கப்பட்டோருக்கு செயற்கை கால், மடக்கு குச்சி, மடக்கு சர்கர நாற்காலி, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், செவி திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கு செவி திறன் கருவி, மாதாந்திர ஓய்வூதியம், வேளை வாய்பில் முன்னுறிமை உள்ளிட்ட திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக தமிழக அரசால் சிறப்பாக செயல்படுத்தப்படகின்றன.                சேலம் மாவட்டத்தில் 2016-2017 ஆம் நிதி ஆண்டிற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த 1,218 மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று  மற்றும் (21.04.2017-22.04.2017) நாளை ஆகிய இரண்டு நாட்கள் நேர்முகத்தேர்வு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அறை எண்.11, நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற முதல் கட்ட நேர்முகத்தேர்வில் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்ட 600 நபர்களில் 310 மாற்றுத்திறனாளிகள் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டனர்.             மான்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 110 – விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட சிறப்பு திட்டமான முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சக்கர நாற்காலி வழங்ககும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் இன்று நேரடி நேர்முக தேர்வில் கலந்து கொண்ட 21 நபர்களின் 18 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ.3.60 லட்சம் மதிப்பில் சிறப்பு சக்கர நாற்காலி வழங்கப்பட்டுள்ளது. முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படாத நபர்களுக்கு உதவித்தொகை வழங்க உத்திரவிடப்பட்டுள்ளது.  இவ்வாறு கலெக்டர் வா.சம்பத்,  தெரிவித்தார்.    முன்னதாக தேவியாக்குறிச்சி, தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லத்தில் இரண்டு நபர்களுக்கு வார்டர் பணியிடத்திற்கான பணிநியமண ஆணையை கலெக்டர்  வழங்கினார்.          இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி, உதவி இயக்குநர் (தொழுநோய்) மருத்துவர்.ஏ.கே.குமுதா, மருத்துவர்.கே.நித்தியா, மருத்துவர்.ஆர்.லதா, வட்டார போக்குவரத்து அலுவலர் டி.தாமோதரன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago