முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்:கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் நடைபெற்றது

வெள்ளிக்கிழமை, 21 ஏப்ரல் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து துறை அரசு அலுவலர்கள், விவசாய பிரநிதிகள், கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசும்போது, சேத்துப்பட்டு அருகே கண்ணணூர் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். குடிநீர் வரி, வீட்டு வரி செலுத்தியவர்களுக்கு மட்டும்தான் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிகள் வழங்கப்படும் என்று கூறுவதை ஏற்க முடியாது. அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். மேலும், 4 மாதங்களாக நிலுவையில் உள்ள கூலித்தொகையை வழங்க வேண்டும். வறட்சி நிலவுவதால் விவசாய பணிக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தொழிலாளர்களை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் மூட்டைகளை கொடுத்த விவசாயிகளுக்கு வழங்காமல் உள்ள  ரூ.1.50 கோடியை உடனடியாக பெற்றுத் தர வேண்டும். ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் 3 மாதமாக மூடிக்கிடக்கிறது. இதற்கு தீர்வுதான் என்ன?. செய்யாற்றில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும்.  செய்யாற்றில் இருந்து நகரின் மைய பகுதி வழியாக காழியூர் ஏரிக்கு செல்லும் நீர்பாசன கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அவற்றை அகற்ற வேண்டும் என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்