முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 141 மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன் கே.சி.கருப்பணன் ஆகியோர் வழங்கினார்கள்.

சனிக்கிழமை, 22 ஏப்ரல் 2017      ஈரோடு
Image Unavailable

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் இன்று (22.04.2017) 141 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.29.03 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்   தலைமையில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.செல்வகுமாரசின்னையன், சட்டமன்ற உறுப்பினர்கள் கே.வி.இராமலிங்கம் (ஈரோடு மேற்கு), கே.எஸ்.தென்னரசு (ஈரோடு கிழக்கு), ஆகியோர் முன்னிலையில் மாண்புமிகு பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் வழங்கினார்கள்.

சமுதாயத்தில் ஒரு அங்கம்
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  தெரிவித்ததாவது.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதும், அவர்களுக்கு நல்வாழ்வு அளிப்பதும் மாநில அரசின் கடமை என்பதை கருத்தில் கொண்டு மறைந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா  சமுதாயத்தில் ஓர் அங்கமாக மாற்றுத்திறனாளிகளை அங்கீகரித்து சமுதாய நிகழ்ச்சிகளில் அவர்களை பங்கேற்க செய்து சமவாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதற்கு தேவையான நடவடிக்கை எடுத்துள்ளார்கள். மாற்றுத்திறனாளிகள் நம்பிக்கையோடு சமுதாயத்தில் வாழவேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்கள்.
மறைந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா  மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில்  பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ளார்கள். இத்திட்டங்கள் மூலம் மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று வருகின்றனர். மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு அதிகபட்ச நிதி ஒதுக்கி அவர்களுக்கு தேவையான உதவிகள், உபகரணங்கள் வழங்கி மற்றும் மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.1,500/- வழங்கி வருகிறார்கள். வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 விழுக்காடு ஒதுக்கீடு செய்து  வாழ்வில் முன்னேற்றம் அடைய வழிவகை செய்துள்ளார்கள். 

 தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் அரசின் உதவித்திட்டங்கள் அனைத்தும் சென்றடையும் வண்ணம் அனைத்து பகுதிகளிலும் மாற்றுத்திறனாளிகள் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் மனவளர்ச்சி பாதிக்கப்பட்டோர் மற்றும் காது கேளாதோருக்கான சிறப்பு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. தொண்டு நிறுவனங்கள் மூலம் காது கேளாதோர் சிறப்பு பள்ளி, காது கேளாதோருக்கான ஆரம்ப கால பயிற்சி மையம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. மேலும் தாளவாடியில் மனநலக் காப்பகம் செயல்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 1,487 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளும்,  568 நபர்களுக்கு இலவசப் பேருந்து பயணச் சலுகை அட்டைகளும், ரூ.3,85,885  மதிப்பில் உதவி உபகரணங்களும், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.1,500/- வீதம் 3,724 பயனாளிகளுக்கு ரூ.4.38 கோடியும் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
 இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக 40 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.58,690/- வீதம் 40 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.23,47,600/- மதிப்பிலான மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில்  பெறப்பட்ட வட்டி தொகையில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பயிற்சி மேற்கொள்வதற்கு ஏதுவாக தலா ரூ.5,258/- வீதம் 100 மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ரூ.5,25,800/- மதிப்பிலான பயிற்சி பொருட்கள் அடங்கிய  ஆசு முஐவுளு டீயுபுளுஇ மாநில அளவில் காதுகேளாதோர் பிரிவில் இரண்டாம் இடம் பெற்ற மாணவிக்கு ரூ.30,000/- மதிப்புள்ள காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் என மொத்தம் 141 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.29,03,400/- மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
 இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் வே.பொ.சிவசுப்பிரமணி (மொடக்குறிச்சி), இ.எம்.ஆர்.ராஜா(எ) கே.ஆர். ராஜாகிருஷ்ணன் (அந்தியூர்), சு.ஈஸ்வரன் (பவானிசாகர்), மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை எ.ஆர்.ஜெகதீசன், மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சதீஸ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீ.குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) தே.ராம்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்