முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசினர் நடுநிலை பள்ளியில் ஆசிரியர்கள் முயற்சியால் மாணவர்கள் சேர்க்கை 100 சதவீதம்

சனிக்கிழமை, 22 ஏப்ரல் 2017      திருவள்ளூர்
Image Unavailable

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சி 1-3 வார்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 1 முதல் 3 வார்டுகளில் உள்ள 5 வயது பூர்த்தியடைந்த மாணவர்களுக்கான முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை நேற்று நடந்தது. பள்ளித் தலைமை ஆசிரியை சந்தானலட்சுமி தலைமை தாங்கினார்.

தனியார் பள்ளி

 தொடக்கக் கல்வி அலுவலர் கிறிஸ்டிடோபர், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஜீலியட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தற்போதைய பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு தொடக்க கல்வியான எல்.கே.ஜி, யு.கே.ஜி. 1 ஆம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளையே நாடி தங்களது குழந்தைகளை படிக்க வைக்கின்றனர்.

இதனால் அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை வெகுவாக குறைந்து கொண்டே வருவது, மட்டுமின்றி அரசு வழங்கக் கூடிய மாணவர்களுக்கான சலுகைகளும், தனியார் பள்ளிக்கு நிகராக தற்போதைய அரசு பள்ளிகள் செயல்படுவது பொது மக்கள் அறியாமல் போகிறது. எனவே இந்த கல்வியாண்டில் புதிய முறையில் மாணவர்கள் சேர்க்கை நடத்திடும் வகையில் பள்ளியை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 5 வயது பூர்த்தியடைந்த மாணவர்களின் பெற்றோர்களிடம் பேசி மாணவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டு, இனிப்புகள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி, பச்சரிசியில் அகர எழுத்தை எழுதி, மாணவர்களை, பெற்றோர்களையும் பள்ளி ஆசிரியர்கள் உற்சாக படுத்தினர்.

தற்போது கோடை விடுமுறைக்கு முன்னதாகவே 1 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை 100 சதவீதம் பூர்த்தியடைந்தது குறிப்பிடத்ததக்கது பெற்றோர்கள் மாணவ-மாணவியர்கள் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்