Idhayam Matrimony

அ.தி.மு.க. இரு அணிகளும் நாளை பேச்சுவார்த்தை

சனிக்கிழமை, 22 ஏப்ரல் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை  - அ தி.மு.க.வில் பிரிந்த இரண்டு அணிகளும் ஒன்று சேர்க்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி அணியில் 7 பேர் கொண்ட குழுவும், ஓ.பன்னீர்செல்வம் அணியில் 7 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் வரும் நாளை 24–ந்தேதி (திங்கட்கிழமை) அ தி.மு.க. தலைமை கழகத்தில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தெரிகிறது.இரண்டு அணியிலும் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து ஒற்றுமையுடன் கட்சியை இணைத்து செல்லவும், ஜெயலலிதாவின் ஆட்சி எந்தவித இடையூறுமின்றி தொடரும் வகையிலும் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம் அணியில் கே.பி. முனுசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், நத்தம் விசுவநாதன், மைத்ரேயன் எம்.பி., பாண்டியராஜன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள்.

எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில் வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், பி.தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இரு அணி குழுவினரும் வருகிற நாளை 24-ந்தேதி (திங்கட்கிழமை) பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளனர். இதற்கிடையில் பேச்சுவார்த்தையில் பேச வேண்டிய அம்சங்கள் பற்றி இரு அணியினருமே ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவும், துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து டி.டி.வி. தினகரனும் ராஜினாமா செய்து கடிதம் கொடுக்க வேண்டும்.பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர் என்று தேர்தல் கமி‌ஷனில் கொடுக்கப்பட்டுள்ள பிரமாண வாக்குமூலங்களை வாபஸ் பெற வேண்டும். ஜெயலலிதா மரணம் பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என்ற 3 கோரிக்கைகளை ஓ.பன்னீர் செல்வம் வைத்துள்ளார். இந்த சூழ்நிலையில் தான் திங்கட்கிழமை பேச்சுவார்த்தை தொடங்குகிறது. நிபந்தனைகளை தளர்த்தினால் மட்டுமே தீர்வு எட்டும் சூழ்நிலை உருவாகும் என்று மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர். இரட்டை இலை சின்னத்தை பெற வேண்டும்.

ஒற்றுமையுடன் கட்சியை வழி நடத்தி செல்ல வேண்டும். 4 ஆண்டுகள் ஜெயலலிதா ஆட்சி தொடர வேண்டும். அதன் பின்னரும் இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பது தான் அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்களின் விருப்பம். எனவே அந்த வகையில் பேச்சுவார்த்தை அமையும் என்று தெரிகிறது.எனக்கு பின்னாலும் 100 ஆண்டு காலம் அ தி.மு.க. நீடித்து நிலைக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறியிருந்தார். அவர் கட்சியை சிறப்பான முறையிலும், ராணுவ கட்டுப்பாட்டுடன் நடத்தி கட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கி தந்தார். எனவே தான் 32 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியில் இருந்த ஒரு கட்சி (அ தி.மு.க.) மீண்டும் ஆட்சியை பிடித்த வரலாற்றை ஜெயலலிதா ஏற்படுத்தினார்.பார்லிமெண்ட் தேர்தலில் தனித்து போட்டியிட்டு 37 தொகுதிகளை கைப்பற்றி இந்தியாவிலேயே 3வது பெரிய கட்சி என்ற சாதனையை படைத்தார் ஜெயலலிதா. எனவே எத்தனையோ சோதனை, கஷ்டங்களை எல்லாம் தாங்கி கட்சியை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்று தொண்டர்களுக்கு பெருமையை தேடித் தந்தார் ஜெயலலிதாஎனவே அவர் வளர்த்த இயக்கத்தை சிதறவிட்டுவிடக் கூடாது. ஒற்றுமையுடன் இருந்து ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து ஆட்சி தொடரவும், தொடர்ந்து ஆட்சியில் இருக்கவும் உறுதிப்பூண்டு செயல்படுவது தான் ஜெயலலிதாவுக்கு செலுத்தும் நன்றி கடன் ஆகும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பது தான் 1½ கோடி தொண்டர்களின் விருப்பமாகும். எனவே இதனை கருத்தில் கொண்டு 24–ந்தேதி துவங்கும் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வெற்றி பாதையில் செல்லும் என்று அனைவரும் எதிர்பார்கிறார்கள்.

ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:- பேச்சுவார்த்தை நடத்துவதற்கு 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவின் தலைவராக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி இருந்து, விரைவில் பேச்சுவார்த்தை நடத்துவார்.அதற்கு முன்னதாக அந்த குழுவில் என்னென்ன பேசவேண்டும்? என்பது குறித்து ஆலோசிப்பார்கள். அதற்கு முன்னால் நிபந்தனைகளை பேசுவது சரியாக இருக்காது. விரைவில் நல்லது நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்