முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆரணி எம்ஜிஆர் பாலிடெக்னிக் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி

சனிக்கிழமை, 22 ஏப்ரல் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

ஆரணி டாக்டர் எம்ஜிஆர் பாலிடெக்னிக் கல்லூரியில் பன்னாட்டு நிறுவனங்களின் வளாக நேர் காணல் நடைபெற்றதில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி

ஆரணி டாக்டர் எம்ஜிஆர் பாலிடெக்னிக் கல்லூரியில் ஏப்ரல்-2017ல் பட்டயப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களின் வளாக நேர் காணல் நடைபெற்றது. இதில் முதல் கட்டமாக யுரேகா ஃபோர்ப்ஸ், பிரேக்ஸ் இந்தியா லிமிடெட், வீட்டா இன்டஸ்ட்ரீஸ், விக்னேஷ் பாலிமர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நேர் காணலை நடத்தினர். இதில் மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆட்டோ மொபைல் துறையை சார்ந்த 77 மாணவ, மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டு பயன் அடைந்தனர். இரண்டாவது கட்டமாக அன்னை த்ரெட்ஸ், உட்ஸ்வ்கிரி கம்ப்யூட்டர்ஸ், நோக்கியா நெட்வொர்க்ஸ், ஹெ-மெக்-சி என் சி, ரானே இன்ஜின் உள்ளிட்ட நிறுவனங்கள் நடத்திய நேர்காணலில் 126 மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு கல்லூரியின் தலைவர் ஏ.சி.எஸ்.அருண்குமார் மற்றும் கல்லூரி செயலாளர் ஏ.சி.இரவி ஆகியோர் பணி நியமன ஆணையை வழங்கினர். கல்லூரி முதல்வர் டி.ஆறுமுகமுதலி பணிநியமன ஆணை பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்