முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்திக்கிறார்

சனிக்கிழமை, 22 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - விவசாய கடனை ரத்து செய்யக்கோரி கடந்த 40 நாட்களாக டெல்லியில் போராட்டம் நடத்திவரும் தமிழக விவசாயிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து பேசுகிறார். முன்னதாக  டெல்லியில் பிரதமர் தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக்கூட்டத்திலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்கிறார்.  தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி சென்று ஜந்தர் மந்தரில் கடந்த 40 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டங்களை அவர்கள் நடத்தி வருகிறார்கள். எலி கறி, பாம்பு கறி உண்ணுதல், வைக்கோல் திண்ணுவது, மண்சோறு சாப்பிடுவது, சாட்டையால் அடித்துக்கொள்வது போன்ற விதவிதமான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு பல்வேறு அமைப்புகளும் அரசியல்வாதிகளும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலத்தை சேர்ந்த விவசாயிகளும் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்து வருவதோடு அவர்களும் ஒரு நாள் போராட்டத்தில் கலந்துகொண்டார்கள்.  மேலும் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை நேரடியாகவும் சந்தித்து பேசி வருகிறார்கள். பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்கும்படியும் தமிழக விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கைவிடத்தயார்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எங்களை சந்தித்து உறுதிமொழி அளித்தால் போராட்டத்தை கைவிட தயார் என்றும் போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

முதல்வர் டெல்லி பயணம்
இந்தநிலையில்  டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை நேரில் சந்திக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்றுமாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் இருக்கும் தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தங்கினார். இன்று காலை சுமார் 10 மணி அளவில் டெல்லியில் நடைபெறும் மத்திய குழு கொள்கைக்குழு கூட்டத்தில் (நிதி ஆயோக்) எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்கிறார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் இந்த கொள்கைக்குழு கூட்டத்தில் இதர மாநில முதல்வர்களும் கலந்துகொள்கிறார்கள். பிரதரம் நரேந்திர மோடி தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

இந்த மத்திய  கொள்கை குழுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்பாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து அவர்களிடம் முதல்வர் விவாதிப்பார் என்று தெரிகிறது. விவசாயிகளின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர் மத்திய கொள்கைக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை சந்தித்து பேசுவார் என்று தெரிகிறது. அப்போது தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை மோடியிடம் எடுத்துரைத்து பிரச்சினைக்கு தீர்வுகாண உதவுமாறு கேட்டுக்கொள்வார் என்றும் தெரிகிறது. இந்தநிலையில் விவசாயிகளின் கோரிக்கைகள் தீர்க்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்தால் போராட்டத்தை கைவிட தயார் என்று அய்யாக்கண்ணு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

திட்டக்குழுவிற்கு பதிலான நிதி ஆயோக்
முன்பு ஒவ்வொரு மாநிலத்திற்கும் நிதி ஒதுக்குவது குறித்து மத்திய திட்டக்குழு முடிவு செய்யும். இந்த குழுவை பிரதமர் மோடி கலைத்துவிட்டு அதற்கு பதிலாக நிதி ஆயோக் என்னும் மத்திய கொள்கைக் குழு என்ற பெயரில் அமைத்து உள்ளார். இந்த குழுவானது மாநிலங்களின் நிதி நிலைமை, நிதி ஆதாரங்களை பெருக்குவது குறித்து ஆய்வு செய்யும். அதன்படி இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்திலும் இது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அப்போது தமிழகத்தின் நிதி நிலைமை, நிதி தேவை மற்றும் நிதி ஆதாரங்களை திரட்டுவது குறித்து கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுத்துரைப்பார் என்று தெரிகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago