முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை இந்தியன்ஸை வீழ்த்தும் திறமை டெல்லி அணியிடம் உள்ளது: மேத்யூஸ்

சனிக்கிழமை, 22 ஏப்ரல் 2017      விளையாட்டு
Image Unavailable

மும்பை : தொடர்ச்சியாக ஐந்து வெற்றிகளை குவித்து முதல் இடம் வகிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியை வீ்ழ்த்தும் திறமை டெல்லி டேர்டெவில்ஸ் அணியிடம் உள்ளது என்று மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.

தொடர் வெற்றி

ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் அதிக வெற்றிகளை குவித்துள்ளன. குறிப்பாக மும்பை அணி தனது முதல் ஆட்டத்தில் தோற்றபின், தொடர்ந்து ஐந்து வெற்றிகளை குவித்துள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் 199 ரன் சேஸிங்கை 15.3 ஓவரிலேயே முடித்தது. இதனால் மற்ற அணிகள் சற்றே அதிர்சியில் உள்ளன.

வெல்ல முடியும்

தொடர்ந்து வெற்றி பெற்று வரும் மும்பை அணியை வீழ்த்தும் திறன் தங்களிடம் உள்ளதாக டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் மேத்யூஸ் கூறியுள்ளார். இதுகுறித்து மேத்யூஸ் கூறுகையில் ‘‘மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக பஞ்சாப் அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியில் 199 ரன்களை 15.3 ஓவரில் எட்டியது. ஆனால், உறுதியாக அவர்களை வெல்ல முடியும். அதற்கான திறமை எங்களிடம் உள்ளது.

நாங்கள் தோற்ற போட்டிகளில் எல்லாம் நெருங்கி வந்துதான் தோற்றோம். அடுத்த முறை இதுபோன்று சூழ்நிலை வந்தால், போட்டியை திறமையாக முடிப்போம்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்