முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தினகரன் குறித்து என்னிடம் கேட்காதீர்கள் : தம்பிதுரை பேட்டி

சனிக்கிழமை, 22 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

 புதுடெல்லி  - அ.தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளராக இருந்த டி.டி.வி தினகரன் பற்றி தன்னிடம் கேட்க வேண்டாம் என்று தம்பிதுரை கூறியுள்ளார். இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் டெல்லி சென்றுள்ளார். நேற்று காலை சென்னையில் இருந்து அவர் விமானம் மூலம் டெல்லிக்கு சென்றார். அதே விமானத்தில் தான் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையும் டெல்லி சென்றார்.

டெல்லி விமான நிலையம் வந்த தம்பிதுரையிடம் செய்தியாளர்கள் டி.டி.வி தினகரன் மீது போடப்பட்டுள்ள வழக்கு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தினகரன் மீது பொய்யான வழக்கு கூட தொடரப்பட்டிருக்கலாம் என்றார். தொடர்ந்து கட்சியில் இருந்து தினகரன் நீக்கப்பட்டது குறித்தும் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு தினகரன் குறித்து எதுவும் என்னிடம் கேட்காதீர்கள்  என்றார் தம்பிதுரை.டிடிவி தினகரன் சென்ற அதே விமானத்தில் தம்பிதுரையும் சென்றது எதேச்சையான சந்திப்பா அல்லது திட்டமிட்ட பயணமா என்று கட்சியினர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago