முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதலில் அதிகாரிகளுக்கு உதாரணமாக பிரதமர் மோடி நடந்துகொள்ள வேண்டும்: ராகுல் காந்தி

சனிக்கிழமை, 22 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, அதிகாரிகளுக்கு முன்மாதிரியாக முதலில் பிரதமர் நரேந்திர மோடி முதலில் நடக்க வேண்டும் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

குடியுரிமை அதிகாரிகள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில் அதிகாரிகள் சமூக வலைதளங்களை தங்களுடையே முன்னேற்றத்திற்கு பயன்படுத்தவோ அல்லது ஆன் லைனில் அதிக நேரம் செலவிடக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

விரைந்து முடிவு எடுப்பதில் ஏற்படும் எந்தவிதமான விளைவுகளை கண்டும் அதிகாரிகள் அஞ்ச வேண்டாம். அதிகாரிகளின் நல்ல முடிவுகளுக்கு நான் எப்போதும் துணையாக நிற்பேன் என்றும் அதிகாரிகளை மோடி உற்சாகப்படுத்தினார்.

பிரதமரின் மோடியின் இந்த பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில்,பொதுமக்களை தொடர்பு கொள்வதற்காக சமூக வலைதளங்களையும் டுவிட்டரையும் இன்ஸ்டக்கிராமையும் பிரதமர் நரேந்திர மோடி யாரும் பயன்படுத்தாத அளவுக்கு அதிகமாக பயன்படுத்துகிறார். இதை குறைத்துக்கொண்டு அதிகாரிகளுக்கு முன்மாதிரியாக நடந்துகொள்ள வேண்டும் என்று மோடியை ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்