முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓய்வு முடிவை பரிசீலனை செய்வேன்: யூனிஸ்கான்

சனிக்கிழமை, 22 ஏப்ரல் 2017      விளையாட்டு
Image Unavailable

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு நான் தேவை என்று கிரிக்கெட் வாரியம் நினைத்தால், ஓய்வு முடிவை பரிசீலனை செய்வேன் என்று அந்த அணியின் மூத்த அனுபவ வீரர் யூனிஸ்கான் கூறியுள்ளார்.

ஓய்வு அறிவிப்பு

பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் அனுபவ வீரர் யூனிஸ்கான். தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறார். இந்த தொடர்தான் அவருடையை கடைசி டெஸ்ட் கிரிக்கெட் தொடர். இந்த தொடருடன் ஓய்வு பெறப்போவதாக தெரிவித்துள்ளார்.

முதல் வீரர்

இந்த தொடருரில் 10 ஆயிரம் ரன்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற இருக்கிறார். ஓய்வு என்று அறிவித்துள்ள யூனிஸ்கான், பாகிஸ்தான் அணிக்கு தான் தேவை என்று கிரிக்கெட் வாரியம் நினைத்தால், எனது ஓய்வு முடிவை பரிசீலனை செய்வேன் என்று கூறியுள்ளார்.

மிகச் சரியான நேரம்

இதுகுறித்து யூனிஸ்கான் கூறுகையில் ‘‘என்னால் இன்னும் அதிகமான போட்டியில் விளையாட முடியும். ரசிகர்கள் இவர் ஓய்வு பெற வேண்டும் என்று நினைப்பதை விட, நான் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் விரும்பிய இந்த நேரம்தான், ஓய்வு பெறுவதற்கு சரியான நேரம் என்று நான் நினைக்கிறேன். ஆகவே, இதுதான் நான் ஓய்வு பெறுவதற்கான மிகச் சரியான நேரம்.

பரிசீலனை செய்வேன்

அதேசமயம், அணிக்கு தேவை என்று பாகிஸ்தான் அணியும், கிரிக்கெட் வாரியமும் விரும்பினால், என்னுடைய ஓய்வு முடிவு குறித்து பரிசீலனை செய்வேன்’’ என்றார். இந்த தொடருடன் பாகிஸ்தான் அணி கேப்டன் மிஸ்பா உல் ஹக்கும் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்