முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகள் போராட்டத்தை கைவிட தலைவர்கள் கோரிக்கை

சனிக்கிழமை, 22 ஏப்ரல் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை  - டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுமாறு தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  டெல்லியில் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 37 நாட்களாக தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர்.  தமிழக விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மத்திய அரசிடம் கொண்டு செல்வதற்காக போராட்ட பாணியை வெவ்வேறு வடிவங்களில் நடத்தி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு விவசாயிகளின் தொடர் போராட்டங்களுக்கு தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது.
விவசாயிகள் பிரச்சினைக்காக போராடுவது குறித்து முடிவெடுப்பதற்காக திமுக சார்பில் கடந்த 16-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தவிர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக ஆகியவையும் பங்கேற்றன.

இந்த நிலையில் நேற்று  திமுக தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் விவசாயிகள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு வரும் 25-ம் தேதி நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் கேட்டுக் கொண்டனர். சட்டப்பேரவை எதிர்க் கட்சி தலைவர் ஸ்டாலின், "டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தைக் தற்காலிகமாக கைவிட்டு பொது வேலை நிறுத்தம் வெற்றி பெற செய்ய வேண்டும்" என்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், "விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட வேண்டும். பொது வேலை நிறுத்தத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களும் விவசாயிகள் போராட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago