முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வறட்சி மற்றும் குடிநீர் திட்ட பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்: அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி தலைமையில் நடந்தது

சனிக்கிழமை, 22 ஏப்ரல் 2017      கிருஷ்ணகிரி
Image Unavailable

 

கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு செயலரும் மாவட்ட வளர்ச்சி பணிகள் கண்காணிப்பு அலுவலர் ஹன்ஸ் ராஜ் வர்மா ஆகியோர் தலைமையிலும் கலெக்டர் சி.கதிரவன் இ.ஆ.ப. முன்னிலையில் நேற்று (22.04.2017) நடைபெற்றது.

 

 

ஆய்வுக்கூட்டம்

 

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வறட்சி மற்றும் குடிநீர் திட்ட பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் கால்நடை பாராமரிப்புத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி , கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு செயலரும் மாவட்ட வளர்ச்சி பணிகள் கண்காணிப்பு அலுவலர் ஹன்ஸ் ராஜ் வர்மா ஆகியோர் தலைமையில் நேற்று (22.04.2017) நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் சி.கதிரவன் வரவேற்புரையாற்றினார். பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன் முன்னிலையாற்றினார். பின்பு வறட்சி மற்றும குடிநீர் திட்ட பணிகள் குறித்து கூட்டத்தில் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண் விற்பனை வணிகத்துறை, பட்டு வளர்ச்சித் துறை, ஆகிய துறைகளில் தண்ணீர் அவசியம் குறித்தும் தமிழ்நாடு குடிநீர் வடிக்கால் வாரியம், நகராட்சி மற்றும் பேரூராட்சி, கிராம ஊராட்சிகள் துறை சார்பில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வினியோகம் செய்வது குறித்தும் வறட்சி காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை எவ்வாறு சம்மாளிப்பது குறித்தும் சம்பந்தபட்ட துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். பின்பு கால்நடை துறை அமைச்சர் வறட்சி மற்றும் குடிநீர் திட்ட பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டத்தை துவக்கி வைத்து பேசியபொழுது:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிநீர் மேலாண்மையை சேமிக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள், மற்றும் நீர் வரத்து கால்வாய்கள், ஆகிய இடங்களை பாதுகாத்து அதிலிருந்து வரக்கூடிய நீரை விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன் படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் அனைத்து கட்டமைப்புகளிலும் மழைநீர் சேகரிப்பு செய்து நீர் ஆதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

மறைந்த முதலமைச்சர் அம்மா அவர்களின் ஆசியோடும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் உத்தரவின் படியும் வறட்சி காலத்தில் குடிநீர் திட்ட பணிகள் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்கும் வகையில் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் குறித்து இக் கூட்டம் நடத்தப்படுகிறது. குறிப்பாக கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் ஆகிய பகுதிகளில் குறித்த நேரத்தில் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். தொர்ந்து அரசினுடைய திட்டங்களை செயல்படுத்துவதில் அதிகாரிகள் முழு ஈடுபாடுடன் செயல்பட வேண்டுமென கால்நடைபாராமரிப்புத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி உரையாற்றினார்.

 

 

தலைமை செயலாளர்

 

கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு செயலரும் மாவட்ட வளர்ச்சி பணிகள் கண்காணிப்பு அலுவலர் ஹன்ஸ் ராஜ் வர்மா உறையாற்றும் போது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் தண்ணீர் முக்கியத்துவத்தை அறிந்து நீர் மேலாண்மையை செயல்படுத்திட வேண்டும். வறட்சி காலத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறார்கள். இந்த ஒருங்கிணைப்பு தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். குடிநீர் மேலாண்மை தொடர்பான விவரங்கள் அரசு அலுவலர்களுக்கு தெரியவரும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியபடுத்து செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஓசூர் நகர் பகுதியில் பெருநகரமாக இருப்பதால் நீரின் முக்கியதுவத்தை அறிந்து புதிய நீராதாரங்களை கண்டறிந்து புதிய திட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் மென கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு செயலரும் மாவட்ட வளர்ச்சி பணிகள் கண்காணிப்பு அலுவலர் ஹன்ஸ் ராஜ் வர்மா தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின் போது ஓசூர் சார் கலெக்டர் முனைவர் ஜெ.யு. சந்திரா கலா மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நரசிம்மன், மாவட்ட உதவி வன பாதுகாவலர் பிரியதர்ஷினி, தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் எஸ்.தென்னரசு, மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர். நிறைவில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சாந்தி நன்றியுரையாற்றினார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்