முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்டத்தில் குடிநீர் திட்டப் பணிகள் மற்றும் வறட்சி குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது

சனிக்கிழமை, 22 ஏப்ரல் 2017      திருப்பூர்
Image Unavailable

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில்,  திருப்பூர் மாவட்டத்தின் குடிநீர் திட்டப் பணிகள் மற்றும் வறட்சி குறித்த ஆய்வுக் கூட்டம்  மாண்புமிகு தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்  தலைமையில் நடைபெற்றது.

ஆய்வுக்கூட்டம்

திருப்பூர்  மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில்,  திருப்பூர் மாவட்டத்தின் குடிநீர் திட்டப் பணிகள் மற்றும் வறட்சி குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்ஃஅரசு செயலர் நிதித்துறை (செலவினம்) பி.செந்தில்குமார்,  மற்றும் மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி,  ஆகியோர்  முன்னிலையில் மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை.கே.ராதாகிருஷ்ணன்  தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்  பேசும்போது தெரிவித்ததாவது
மறைந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி செயல்படும் தமிழக அரசு தமிழக மக்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் மழை அளவு குறைந்துள்ளதால் அனைத்துப்பகுதிகளிலும் வறட்சியான சூழல் நிலவிவருகிறது. இதனை போக்குவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தி வருகிறது. நமது மாவட்டத்தில் உள்ள தொடர்புடைய அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பொது மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீரினை எவ்வித தங்குதடையுமின்றி கிடைத்திட துரிதமான முறையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்  அறிவுறுத்தினார்கள்.

13 ஊராட்சி ஒன்றியம்

மேலும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் மாநகராட்சி, 5 நகராட்சிகள், 16 பேரூராட்சிகள் மற்றும் 13 ஊராட்சி ஒன்றியம் ஆகிய  பகுதிகளில் பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும்  குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் வறட்சி குறித்தும்  மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்  அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். பொது மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வழங்குவது குறித்து அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து சரியான முறையில் திட்டமிட்டு குடிநீர் பற்றாக்குறையினை தீர்ப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளவும், நீர் உள்ள இடங்களைக்  கண்டறிந்து தேவையான இடங்களில் புதிய ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்கும், பழுதடைந்த ஆழ்துளை கிணறுகளை சரிசெய்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அலுலவர்களுக்கு மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்  தெரிவித்தார்கள்.
இதனைத்தொடர்ந்து, குண்டடம் ஊராட்சி ஒன்றியம், நந்தவனம்பாளையம் ஊராட்சி, எஸ்.அம்மாபாளையத்தில் மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் மூலம் பணியாளர்களைக் கொண்டு  கால்நடைகளின் தீவனத்திற்காக ஹைட்ரோ போனிக் முறையில் மக்காச்சோள தீவனங்கள் வளர்ப்பதற்கான உபகரணங்களை மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்  வழங்கினார்கள்.              
இந்நிகழ்வின்போது, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் சு.குணசேகரன் (திருப்பூர் தெற்கு), கரைப்புதூர்                     ஏ.நடராஜன் (பல்லடம்), கே.என். விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), உ.தனியரசு (காங்கேயம்), காளிமுத்து (தாராபுரம்), மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி, திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் மா.அசோகன், மாவட்ட ஊரக வளாச்சி முகமையின் திட்ட இயக்குநர் (பொ) மைக்கேல், சார் கலெக்டர்கள் ஷ்ரவன்குமார்  (திருப்பூர்) கிரேஸ்பச்சாவு (தாராபுரம்), உடுமலைப்பேட்டை வருவாய்கோட்டாட்சியர் சாதனைக்குறள், அனைத்து வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago