முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் மாவட்டத்தில் 72 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா ஸ்கூட்டர்கள்: அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்

சனிக்கிழமை, 22 ஏப்ரல் 2017      விழுப்புரம்

 

விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, 72 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.31 இலட்சம் மதிப்பீட்டில் விலையில்லா ஸ்கூட்டர் மற்றும் சிறப்பு சக்கர நாற்காலிகளை, கலெக்டர் இல.சுப்பிரமணியன், தலைமையில், சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்களால் வழங்கப்பட்டது.

விலையில்லா ஸ்கூட்டர்

 விழுப்புரம் மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் துறை சார்பாக, 2015-2016-ம் நிதியாண்டு பொதுத் திட்டத்தின்கீழ் 42 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.25,20,000- மதிப்பீட்டில் விலையில்லா ஸ்கூட்டர்களையும் மற்றும் முதுகுதண்டுவடம், நரம்பு உரை தேய்வு நோய் மற்றும் தண்டுவட குறைபாடு நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட 30 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.6 இலட்சம் மதிப்பீட்டில் சிறப்பு சக்கர நாற்காலிகளையும் சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்களால் வழங்கப்பட்டது.

இவ்விழாவில், ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் செஞ்சிசேவல் வெ.ஏழுமலை, கள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர்.க.காமராஜ், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் இரா.குமரகுரு, வானூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.சக்ரபாணி, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அ.பிரபு, மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ஸ்ரீநாத் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்