முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வலங்கைமானில் 392 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 26 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பில் மின்னணு குடும்ப அட்டைகள் : அமைச்சர் காமராஜ் வழங்கினார்

சனிக்கிழமை, 22 ஏப்ரல் 2017      திருவாரூர்
Image Unavailable

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் 392 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 26 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பில் மின்னணு குடும்ப அட்டைகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் வழங்கினார்.இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் க.சக்திமணி தலைமையேற்று, நாகை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கே.கோபால் முன்னிலை வகித்தார்.

 மின்னணு அட்டை

 இவ்விழாவில் உணவுத்துறை அமைச்சர் பேசியதாவது, திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் 392 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகள், இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை,திருமண உதவித்தொகை, வேளாண்மைதுறை சார்பாக மழைத்தூவான், சலவைப்பெட்டிகள், வட்டாட்சியர் அலுவலக பயன்பாட்டிற்கு கணினி மற்றும் அச்சுப்பொறி இயந்திரங்கள் உள்ளிட்டவைகள் ரூ.3 கோடியே 26 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பில் வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாட்டில் 1 கோடியே 84 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 30 சதவீதம் அளவிற்கு தமிழகத்தில் உற்பத்தியாகிறது.

மத்திய தொகுப்பில் விலைக்கொடுத்து வாங்கி விலையி;ல்லாமல் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கப்பட்டு வருகிறது. 2005 ஆண்டு முதலமைச்சராக இருந்த இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா புதிய குடும்ப அட்டையை வழங்கினார்கள். தற்போது புரட்சி தலைவி அம்மா அவர்களின் அரசால் மின்னணு குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது. 2014 ஆம் ஆண்டு மத்திய அரசு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டத்தை தொடங்கிய போது தமிழக அரசு ஆதார் எண்ணையும் கணக்கெடுப்போடு இணைத்து ரூ.330 கோடி மதிப்பில் மின்னணு குடும்ப அட்டை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டார்கள். கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி திருவள்ளுர் மாவட்டத்தில் இத்;திட்டம் தமிழக முதலமைச்சர் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே மாத இறுதிக்குள் மின்னணு குடும்ப அட்டைகள் அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மத்திய அரசு செயல்படுத்தி உணவு பாதுகாப்புத்திட்டத்தில் 1 நபருக்கு 5 கிலோ வீதம் அரிசி வழங்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டும்தான் 1 நபர் உள்ள குடும்ப அட்டைக்கு 12 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.5 பேர் ஒரு குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மட்டும்தான் நபர் ஒன்றுக்கு 5 கிலோ வீதம் 25 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.தமிழ்நாட்டில் மட்டும்தான் அனைவருக்குமான உணவுபாதுகாப்புத்திட்டம் வெகு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. வலங்கைமானில் பேரூராட்சியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 150 நபர்களுக்கு தலா ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் வீதம் ரூ.3 கோடியே 15 லட்சம் மதிப்பில் வீடு கட்டும் பணிக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது.தமிழக அரசு புரட்சி தலைவி அம்மா எண்ணிய திட்டங்களை தம்pழக மக்களுக்காக நிறைவேற்றி வருகிறது என உணவுத்துறை அமைச்சர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் முத்துமீனாட்சி, மாவட்ட வழங்கல் அலுவலர் இருதயராஜ், துணை கலெக்டர் சமூகபாதுகாப்புத்திட்டம் விஜயலெட்சுமி, முன்னாள் பேரூராட்சி தலைவர் மாஸ்டர் ஜெயபால்,முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பரமேஸ்வரி ராஜமாணிக்கம், அவளிவநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர்,வலங்கைமான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் குணசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்