முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மான்ட்கார்லோ சர்வதேச டென்னிஸ்: காலிறுதியில் ஜோகோவிச், மரின் சிலிச் தோல்வி

சனிக்கிழமை, 22 ஏப்ரல் 2017      விளையாட்டு
Image Unavailable

மான்ட்கார்லோ : மொனாக்கோவில் நடந்து வரும் மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் நேற்று முன்தினம் நடந்த ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச், மரின் சிலிச் தோல்வியை தழுவினர்.

சர்வதேச டென்னிஸ்

மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 24-வது இடத்தில் இருக்கும் ஆல்பர்ட் ரமோஸ் வினோலாஸ் (ஸ்பெயின்), 8-ம் நிலை வீரர் மரின் சிலிச்சை (குரோஷியா) எதிர்கொண்டார்.

ஜோகோவிச் தோல்வி

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஆல்பர்ட் ரமோஸ் 6-2, 6-7 (5-7), 6-2 என்ற செட் கணக்கில் மரின் சிலிச்க்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். மற்றொரு கால்இறுதியில் பெல்ஜியத்தின் டேவிட் கோபின் 6-2, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச்சை (செர்பியா) சாய்த்தார்.

ரோகன் போபண்ணா

ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)-பாப்லோ கியூவாஸ் (உருகுவே) ஜோடி 6-7, 6-4, 10-6 என்ற செட் கணக்கில் ராவென் கிளாசென்(தென்ஆப்பிரிக்கா)-ராஜீவ் ராம் (அமெரிக்கா) இணையை வெளியேற்றி கால்இறுதிக்கு தகுதி பெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago