முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாமக்கல் மாவட்டத்தில் ரூ.57.59 லட்சம் மதிப்பீட்டில் பேரூராட்சிகளுக்கு குப்பை சேகரிக்கும் புதிய டிப்பர் மினி லாரிகள் மற்றும் தள்ளுவண்டிகள் :அமைச்சர்கள் பி.தங்கமணி, டாக்டர்.வி.சரோஜா வழங்கினர்

சனிக்கிழமை, 22 ஏப்ரல் 2017      நாமக்கல்
Image Unavailable

 நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நாமக்கல் மாவட்ட பேரூராட்சிகள் துறையின் சார்பில் திடக்கழிவு மேலாண்மைத்திட்டத்தின் கீழ் பேரூராட்சிகளுக்கு குப்பை சேகரிக்கும் மினி டிப்பர் லாரிகள் வழங்கும் நிகழ்ச்சியும், குப்பை சேகரிக்கும் தள்ளுவண்டிகள் மற்றும் குப்பை சேகரிக்கும் கூடைகள் வழங்கும் நிகழ்ச்சியும், பாரதப்பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பேரூராட்சிகளில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணை வழங்கும் நிகழ்ச்சியும் நேற்று (22.04.2017) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளுக்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சிக்கு நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் சோ.மதுமதி , நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் , சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சி.சந்திரசேகரன் , திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சிகளில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி மற்றும் சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் டாக்டர்.வி.சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு பேரூராட்சிகளுக்கு குப்பை சேகரிக்கும் மினி டிப்பர் லாரிகள், குப்பை சேகரிக்கும் தள்ளுவண்டிகள் மற்றும் குப்பை சேகரிக்கும் கூடைகளையும், பாரதப்பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பேரூராட்சிகளில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணைகளையும் வழங்கினார்கள்.

அமைச்சர் வழங்கினார்

நாமக்கல் மாவட்ட பேரூராட்சிகள் துறையின் சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ஆர்.புதுப்பட்டி பேரூராட்சி, வெங்கரை பேரூராட்சி, படவீடு பேரூராட்சி ஆகிய 3 பேரூராட்சிகளுக்கு தலா ரூ.12.50 இலட்சம் வீதம் ரூ.37.50 இலட்சம் மதிப்பிலான குப்பை சேகரிக்கும் 3 மினி டிப்பர் லாரிகளையும், அத்தனூர், காளப்பநாய்க்கன்பட்டி, படைவீடு, பட்டணம், பிள்ளாநல்லூர், ஆர்.புதுப்பட்டி மற்றும் வெங்கரை ஆகிய 7 பேரூராட்சிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.20.09 இலட்சம் மதிப்பீட்டில் 98 குப்பை சேகரிக்கும் தள்ளுவண்டிகளையும், 392 குப்பை சேகரிக்கும் கூடைகளையும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி மற்றும் சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் டாக்டர்.வி.சரோஜா ஆகியோர் வழங்கினர்.

அதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில் பாரதப்பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ஆர்.புதுப்பட்டி பேரூராட்சியில் தேர்வு செய்யப்பட்ட 106 பயனாளிகளுக்கும், வெங்கரை பேரூராட்சியில் தேர்வு செய்யப்பட்ட 42 பயனாளிகளுக்கும், பாண்டமங்கலம் பேரூராட்சியில் தேர்வு செய்யப்பட்ட 46 பயனாளிகளுக்கும், சேந்தமங்கலம் பேரூராட்சியில் தேர்வு செய்யப்பட்ட 70 பயனாளிகளுக்கும், காளப்பநாய்க்கன் பட்டி பேரூராட்சியில் தேர்வு செய்யப்பட்ட 36 பயனாளிகளுக்கும், நாமகிரிப்பேட்டை பேரூராட்சியில் தேர்வு செய்யப்பட்ட 74 பயனாளிகளுக்கும், பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் தேர்வு செய்யப்பட்ட 29 பயனாளிகளுக்கும், சீராப்பள்ளி பேரூராட்சியில் தேர்வு செய்யப்பட்ட 70 பயனாளிகளுக்கும் மற்றும் பட்டணம் பேரூராட்சியில் தேர்வு செய்யப்பட்ட 110 பயனாளிகளுக்கும் என மொத்தம் 9 பேரூராட்சிகளில் தேர்வு செய்யப்பட்ட 583 பயனாளிகளுக்கு ரூ.1836.45 இலட்சம் மதிப்பீட்டில் அனைவருக்கும் தனித்தனி வீடுகள் கட்டுவதற்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கும் விதமாக ஒவ்வொரு பேரூராட்சிகளிலும் 2 பயனாளிகள் வீதம் 9 பேரூராட்சிகளில் தேர்வு செய்யப்பட்ட 18 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஒதுக்கீடு ஆணைகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி மற்றும் சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் டாக்டர்.வி.சரோஜா ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்ச்சிகளில் நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிச்சாமி, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் மா.ராஜசேகரன், பேரூராட்சிகள் துறை உதவி செயற்பொறியாளர் ஆர்.ஜெகதீஸ்வரி, சேலம் நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த ஆவின் தலைவர் ஆர்.சின்னுசாமி, முன்னால் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவாளர்கள், அரசுத்துறை அலுவலர்கள், பயனாளிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்