முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு மக்கள் பெருமளவு ஆதரவு : அருண்ஜெட்லி பேச்சு

சனிக்கிழமை, 22 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்-  எங்கள் அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு நாட்டு மக்கள் பெரும்பான்மையானோர் பெரும் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். இதற்கு சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டசபை தேர்தல் ஒரு உதாரணம் என்று வாஷிங்டன்னில் இந்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறினார்.  அமெரிக்கா சென்றுள்ள இந்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லிக்கு அங்கு வாழும் இந்திய மக்கள் சார்பாக அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நவ்தெஜ் சர்ணா விருந்துகொடுத்தார். விருந்தில் அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாகத்தில் இருக்கும் முக்கிய அதிகாரிகள், தூதர்கள், பெரும் கம்பெனி அதிபர்கள், கல்வியாளர்கள், அமெரிக்கா வாழ் இந்தியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.  அந்த விருந்தில் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கலந்துகொண்டு பேசினார்.  

அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவில் நாங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு நாட்டு மக்கள் பெரும்மளவில் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். இதற்கு உதாரணமாக சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டசபை தேர்தலை சொல்லலாம். தற்போது எங்களுடைய முக்கியமானவைகளில் பொருளாதாரம்தான் . நாங்கள் மேற்கொள்ளும் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு எங்கள் மக்கள் பெருமளவில் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

இதற்கு முன்பு இருந்த இந்திய அரசுகள் பல கட்டங்களாக பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசியல் ரீதியாக பாதிப்பு ஏற்படும் என்று நினைத்தன. அதனால் பொருளாதார சீர்திருத்தத்தில் தடங்கல்களும் முட்டுக்கட்டைகளும் ஏற்பட்டன. இந்தியாவில் அடுத்தடுத்து நடந்த தேர்தல் முடிவுகள் நாங்கள் மேற்கொண்டு வரும் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு மக்கள் பெரும் அளவு ஆதரவு கொடுத்து வருவது தெளிவாக தெரிகிறது.உலக அளவில் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருந்தபோதிலும் நாங்கள் கடந்த 3 ஆண்டுகளாக மேற்கொண்டுவரும் பொருளாதார சீர்திருத்தங்களால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 முதல் 8 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்துள்ளது. அந்த வளர்ச்சி தொடர்ந்து நிலைநாட்டப்பட்டு வருகிறது.

கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 முதல் 8 சதவீதம் வரை இருந்தது. இந்தாண்டு 7.2 சதவீதமாக வளர்ச்சி உள்ளது. முதலில் 7.8 சதவீதமும் 7.1 சதவீதமாகவும் இருந்தது. வரும் ஆண்டுகளில் மேலும் பொருளாதார வளர்ச்சியானது இரண்டு அம்சங்களை பொருத்து உள்ளது. அதில் ஒன்று உலக அளவில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டும். இரண்டாவது அம்சமானது புதிய வழிமுறைகள் மூலம் கிடைக்கும் வருவாயாகும். விற்பனை மற்றும் சேவை வரி விதிப்பு மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். இவ்வாறு அமைச்சர் அருண்ஜெட்லி கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்