முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளிக் கட்டணமாக ஆடுகள்: ஜிம்பாப்வே புதுமை திட்டம்

சனிக்கிழமை, 22 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

ஜிம்பாப்வே - ஆப்பிரிக்க கண்டத்தின் தெற்கில் ஜிம்பாப்வே நாடு உள்ளது. வறட்சி, பணவீக்கம், ஊழல் உள்ளிட்ட பல்வேறு காரணங் களால் அந்த நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியவில்லை. அந் நாட்டு அதிபர் ராபர்ட் முகாபேவுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பணத் தட்டுப்பாட்டால் ஏழை பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் கல்வி கட்டணத்தைச் செலுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அந்த நாட்டு கல்வித் துறை அமைச்சர் லாசரஸ் டொகோரா பழங்கால பண்டமாற்று முறை அடிப்படையில் புதுமையான ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

“கிராமங்களைச் சேர்ந்த ஏழை பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் கல்விக் கட்டணத்தை ஆடுகளாகச் செலுத்தலாம். இதனை பள்ளி நிர்வாகங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். நகரங்களைச் சேர்ந்த பெற்றோர் தங்களின் உழைப்பு, சேவைகள் மூலம் பள்ளிக் கட்டணத்தைச் செலுத்தலாம். உதாரணமாக கட்டுமான தொழிலாளி ஒருவர் பள்ளிக்கான கட்டிடத்தை கட்டிக் கொடுக்கலாம்.” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனிடையே வங்கிகளும்கூட பிணைத் தொகையாக கால்நடை களை ஏற்றுக் கொள்ளலாம் என்று ஜிம்பாப்வே அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago