முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனை தீர்க்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தகவல்

சனிக்கிழமை, 22 ஏப்ரல் 2017      திருவண்ணாமலை

 திருவண்ணாமலை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக திருவண்ணாமலையில் நேற்று மாலை நடந்த வறட்சி நிவாரண பணிகள் குறித்த மாவட்ட அளவிலான ஆய்வு கூட்டத்தில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கூறினார். திருவண்ணாமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வறட்சி நிவாரண பணிகள் குறித்த மாவட்ட அளவிலான ஆய்வு கூட்டம் தி.மலை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.

ஆய்வு கூட்டம்

இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை தாங்கினார். நில நிர்வாக ஆணையரும் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ஜபிந்திரநாத், மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அதிகாரிகளுடன் வறட்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு கருத்துக்களை கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து அவர் பேசும்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனை தீர்க்க தமிழக அரசு மூலம் போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் 18 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க அதிகாரிகள் நேரடி கள ஆய்வு மேற்கொண்டு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றும் கடும் வறட்சி நிலவுவதால் பழுதடைந்த போர்வெல் புனரமைக்க வேண்டும் மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க விரைவான நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார் இந்த ஆய்வு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்.வனரோஜா, செஞ்சி சேவல் ஏழுமலை, சட்டமன்ற உறுப்பினர்கள் வி.பன்னீர்செல்வம், தூசி கே.மோகன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் எம்.எஸ்.நைனாகண்ணு, தண்டராம்பட்டு நிலவளவங்கி தலைவர் எஸ்.ஆர்.தருமலிங்கம், மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயலர்கள், மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்