முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியலில் தமிழில் மாணவர் பெயர் அச்சடிப்பு - பள்ளிக் கல்வி இயக்குநர் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 23 ஏப்ரல் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண் பட்டியலில் முதல்முறையாக தமிழில் மாணவர்களது பெயர் அச்சிடப்பட உள்ளது என மாநில பள்ளிக் கல்வி இயக்கு நர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.

தஞ்சாவூரில்  செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஆசிரியர்களுக்கான கலந்தாய் வுக்கு வரும் 24-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்படுகின் றன. கலந்தாய்வு மே 19-ம் தேதி தொடங்கி, 31-ம் தேதி வரை நடை பெறுகிறது. உலக புத்தக தினத்தை சிறப்பாகக் கொண்டாடும் வகை யில், 32 மாவட்ட மைய நூலகங்களிலும் பொது நூலக இயக்கத்தின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

தமிழ்- ஆங்கிலத்தில் பெயர்

தற்போது 10- ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி முடிந்துள்ளது. பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி 24-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. ஏற்கெனவே அறிவித்த படி தேர்வு முடிவுகள் வெளியிடப் படும். மே மாத இறுதிக்குள் மாணவர் களுக்கு மதிப்பெண் சான்றிதழ் கள் வழங்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு முதல்முறையாக மதிப் பெண் பட்டியலில் மாணவர்களின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட உள்ளது.

இலவச கல்வி வழங்கும் உரிமை திட்டம் 

வெயில் அதிகமாக இருப்ப தால் கோடை விடுமுறையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறி நடத்தும் பள்ளிகள் குறித்து புகார் அளித்தால் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏழைக் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கும் உரிமை திட் டத்தின் கீ்ழ், இதுவரை 2 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலம் விண்ணப் பித்துள்ளனர். நேரடியாக பள்ளி களிலும் விண்ணப்பிக்கலாம். தகுதி அடிப்படையில் பள்ளிகளில் இந்த மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்