முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க இணைப்பு பேச்சுவார்த்தை சென்னையில் இன்று நடக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை, 23 ஏப்ரல் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : அதிமுக இரு அணிகள் இணைப்பு குறித்து இன்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் இரு குழுவினரும் காலை 10 மணிக்கு சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர், .

டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியில் இருந்து விலக்கி வைத்ததை தொடர்ந்து, எடப்பாடி அணியினரும், ஓ.பி.எஸ் அணியினரும் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணி சார்பில் அ.தி.மு.க எம்.பி. வைத்திலிங்கம் தலைமையில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் அடங்கிய 7 பேர் குழு அமைக்கப்பட்டது. அதேபோன்று, ஓ.பி.எஸ் அணி சார்பில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையில் நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், மைத்ரேயன், மா.பா.பாண்டியராஜன், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் அடங்கிய 7 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் இன்று காலை 10 மணியளவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரிடம் அந்தந்த அணியினர் தனித்தனியே ஆலோசனை நடத்தி அதில் முழு திருப்தி ஏற்பட்டால், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி சந்தித்து அதிகாரபூர்வமாக இணைவது தொடர்பாக அறிவிப்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்