முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு - போராட்டம் தற்காலிக வாபஸ்

ஞாயிற்றுக்கிழமை, 23 ஏப்ரல் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு விட்டு தமிழகம் திரும்ப வேண்டும் என்று அவர்களை சந்தித்து பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்,

புதுடெல்லியில் நடைபெற்ற லோக் ஆயுக்தா மாநில அரசுகளின் மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னதாக டில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளை சந்தித்து பேசினார், அப்போது அவர்கள் மத்தியில் முதல்வர் எடப்பாடி பழனிசசாமி பேசியதாவது: 2016 சட்டமன்றத் தேர்தலின் போது அ.தி.மு.க சார்பாக, தேர்தல் அறிக்கைவெளியிட்டார்கள். அப்பொழுது, அ.தி.மு.க ஆட்சி தமிழகத்திலே மலர்ந்தவுடன், முதன்முதலாக விவசாயிகளுடைய கடன் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பைத் தந்தார்கள்.

140 ஆண்டு காலம் இல்லாத வறட்சி

மக்களுடைய பேராதரவின் மூலமாக ஜெயலலிதா ஆட்சியிலே அமர்ந்தவுடன், விவசாயிகளுடைய கடனை முதலிலே ரத்து செய்துகையொப்பமிட்டவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.  அதே போல, தென்மேற்குபருவமழை, வடகிழக்கு பருவமழை, இரண்டு பருவமழைகளும் பொய்த்ததின் காரணமாக,140 ஆண்டு காலம் இல்லாத வறட்சி தமிழகத்திலே நிலவிக் கொண்டிருக்கின்றது. அந்த\வறட்சியால் விவசாயிகள் மகசூல் பாதிக்கப்பட்டு, அந்த பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குநிவாரணம் வழங்க வேண்டும் என்ற அடிப்படையிலே, மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தோம்.

ரூ. 39,565 கோடி கேட்டோம்

பிரதமர் மோடியை நானே நேரிலே சந்தித்து 39,565 கோடி எங்களுக்கு வழங்க\வேண்டுமென்று கோரிக்கை மனு கொடுத்தோம். வறட்சியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குவழங்குவதற்காக 2247 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்த தொகையெல்லாம் வங்கியின்மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதோடு, புதியதாக பயிர் செய்தவிவசாயிகளுக்கும் பயிர்க்கடனும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அதே போல,நீர்நிலைகளில் இருக்கின்ற நீரை சேமித்து வைக்க வேண்டும் என்பதற்காக குடிமராமத்து திட்டத்தை தமிழகத்திலே துவங்கி, அதற்கு 100 கோடி ரூபாய் முதற்கட்டமாக ஒதுக்கி, 1519 ஏரிகள் இப்பொழுது தூர்வாரப்பட்டு வருகின்றன. மேலும், இந்தத் திட்டத்தை  விரிவுபடுத்துவதற்காக 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அம்மாவினுடைய அரசால் ,விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றது என்பதைஇந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பிரதமரிடம் வலியுறுத்துவோம் 

இங்கே விவசாயிகளினுடைய பிரதிநிதிகள்,அதனுடைய தலைவர் அய்யாக்கண்ணு வைத்த கோரிக்கையை பிரதமர் மோடியிடம் வலியுறுத்திகூறப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.இங்கே 41 நாட்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்ற தமிழக விவசாய பிரதிநிதிகள்தங்களுடைய உண்ணாவிரதத்தை முடித்து, போராட்டத்தை கைவிட்டு, அங்கே தமிழகத்திற்குதிரும்ப வேண்டும் என்று அன்போடு அவர்களை கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்